CSK vs RCB – 20 ரன்களை குறைவாக அடித்துவிட்டோம்.. தோல்வி குறித்து டுபிளசிஸ் கருத்து
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர் சி பி அணியை வீழ்த்தி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ருதுராஜ் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டிகளில் வெற்றியை பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்சிபி அணி கேப்டன் டுப்ளசிஸ் பேட்டிங்கில் 20 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம் என்று கூறியுள்ளார். பவர் பிளேவின் எப்போதுமே நன்றாக பயன்படுத்திக் கொண்டு ரன்களை சேர்க்க வேண்டும்.
இல்லை என்றால் சுழற் பந்துவீச்சாளர்கள் சென்னை ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு நமது கதையை முடித்து விடுவார்கள். நாங்கள் முதல் ஆறு ஓவரில் அதிக விக்கெட் இழந்து விட்டோம். நாங்கள் முதல் 10 ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. ஆனால் ஆடுகளம் நன்றாக தான் இருந்தது.
நாங்கள் சென்னையை விட கொஞ்சம் பின்தங்கி தான் போட்டி முழுவதும் இருந்தோம். அவர்கள் எங்களை விட போட்டியில் அனைத்து கட்டத்திலும் முன்னேறி சென்றார்கள். சிஎஸ்கே வீரர் சிவம் துபே ஷார்ட் பால்களை எதிர்கொள்ள கொஞ்சம் தடுமாறினார். இதை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் தொடர்ந்து ஷார்ட் பந்துகளை வீசினோம். நடு ஓவர்களில் கொஞ்சம் விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தோம்.
ஆனால் அது பலன் அளிக்கவில்லை. நீங்கள் புள்ளிவிவரத்தை பார்த்தால் சென்னை ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிக வெற்றியை பெற்று இருக்கிறது. ஆடுகளமும் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருந்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ததில் எந்த தவறும் இல்லை.
எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர் நன்றாக செயல்பட்டார்கள் என்று தான் நினைக்கிறேன். தினேஷ் கார்த்திக் கடந்த ஒரு ஆண்டாக எந்த கிரிக்கெட்டும் விளையாடவில்லை என நினைக்கிறேன். ஆனால் அவர் இன்றைய ஆட்டத்தில் முக்கிய இன்னிங்ஸ் ஒன்றை ஆட இருக்கிறார். இதேபோன்று அனுஜ் ரவத்தும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார் என்று டுபிளசிஸ் கூறியுள்ளார்.