ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் படுபயங்கர தாக்குதல்! 40 பேர் பலி..அதிர வைத்த தீப்பிழம்பு வீடியோ
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.
படுபயங்கர தாக்குதல்
மாஸ்கோ நகரில் அமைந்துள்ள கச்சேரி அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக மக்கள் பலர் கூடியிருந்தனர்.
அப்போது பல துப்பாக்கி ஏந்திய நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் பார்வையாளர்கள் மீது தானியங்கி துப்பாக்கிச்சூடு செய்துள்ளனர்.
மேலும் அரங்கினை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் உண்டான தீப்பிழம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Video posted by the Counter Intelligence Global Telegram channel shows the Crocus City Hall roof collapsing in flames.
More live developments https://t.co/BoGDrHL3ZS pic.twitter.com/zdeDUwPx4D
— The Moscow Times (@MoscowTimes) March 22, 2024
40 பேர் பலி
இச்சம்பவத்தில் 40 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் வெடிமருந்துகளை வீசியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதனால், அப்பகுதிக்கு கலகத் தடுப்புப் பிரிவுகள் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.