பெங்களூருவில் பரபரப்பு..! பிக் பாஸ் நடிகை திடீர் கைது..!
பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான சோனு ஸ்ரீனிவாஸ் கவுடா கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த இவர் சமூக ஊடகங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான நடிகையாவார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் சிறுமியை சட்டவிரோதமாக தத்தெடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சிறுமியுடன் உள்ள வீடியோவை அடிக்கடி சமூக ஊடகங்களில் சோனு கவுடா பகிர்ந்து வந்தார். சோனு கவுடா மீது குழந்தைகள் நலத்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டருந்த நிலையில் ஜே.ஜே. சட்டத்தின் கீழ் கைது செய்யது போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விசாரணையின் போது நடிகை சோனு கவுடா போலீஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், ” நான் தத்தெடுத்த சிறுமி, எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு அருகே பூச்சு வேலை செய்து கொண்டிருந்த தம்பதியின் மகள். அவர் வீட்டிற்கு வந்து விளையாடினார். ஊருக்குப் போனதும் உடம்பு சரியில்லாத நேரத்திலும் போன் பண்ணினாள். அதனால் அந்த சிறுமியை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ராய்ச்சூரில் இருந்து தந்தைக்கு போன் செய்தேன். தத்தெடுக்கவும் தயார். சமூக வலைதளங்களில் கிடைக்கும் பணத்தை அவள் வாழ்க்கையை கட்டமைக்க பயன்படுத்த விரும்பினேன். ஆனால் தத்தெடுப்பு செயல்முறை இவ்வளவு பெரியது என்று எனக்குத் தெரியாது ” என்று கூறியுள்ளார்.