இந்தியாவில் அறிமுகமான 2024 டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் வி4எஸ் மாடல்கள்! விலை விவரம்
சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் டுகாட்டி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் தனது புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 (Streetfighter V4)-ஐ அறிமுகம் செய்துள்ளது இது ஸ்டாண்டர்ட் மற்றும் வி4எஸ் (Streetfighter V4S) ஆகிய 2 வேரியன்ட்ஸ்களில் கிடைக்கிறது.
இதில் ஸ்டாண்டர்ட் அதாவது Streetfighter V4 வேரியன்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.24.62 லட்சமும், ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4எஸ் வேரியன்ட்டின் டுகாட்டி ரெட் கலரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.24.62 லட்சமும், கிரே நீரோ கலரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.28 லட்சமும் ஆகும்.
அப்டேட் செய்யப்பட்டு புதிதாக அறிமுகமாகி இருக்கும் Streetfighter V4 மாடலானது அக்ரஸ்ஸிவ்வான, முரட்டு தனமான தோற்றத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே நேரம் இந்த மாடல் இப்போது ஒரு உறுதியான ஃப்யூயல் டேங்க், கிரிஸ்ப்பான LED ஹெட்லைட் மற்றும் ஸ்ட்ரீம்லைன்ட் டெயில் செக்ஷன் உள்ளிட்ட மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த பைக் BMW S 1000 RR Pro M Sport மற்றும் Kawasaki ZH2 உள்ளிட்ட மாடல்களுடன் உடன். புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4-ன் அம்சங்கள் மற்றும் திறன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இதற்கிடையே இந்த புதிய அறிமுகம் குறித்து டுகாட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பிபுல் சந்திரா பேசுகையில், புதிய Streetfighter V4 பைக்கானது Panigale V4 மாடலின் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு கேம்-சேஞ்சராக நிரூபிக்கப்பட்டுள்ளது. அற்புதமான பவர், கண்ணைக்கவரும் டிசைன் உள்ளிட்ட பலவற்றுடன் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4S ஆனது, சூப்பர் நேக்கட் பிரிவில், பைக் சவாரி செய்வதில் உள்ள சுவாரஸ்யத்தை மறுவரையறை செய்ய ரைடர்களுக்கு உதவும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என்றார்.
புதிய டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4, வி4 எஸ்-ல் கொடுக்கப்பட்டிருக்கும் எஞ்சின்…
ஆல்-நியூ டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டரில் 1,103சிசி வி4 லிக்விட்-கூல்ட் டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் எஞ்சின் உள்ளது. இது ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் கிளட்ச் உடன் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 13,000rpm-ல் 205bhp பவரையும், 9,500rpm-ல் 123Nm பீக் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த யூனிட் பை-டைரக்ஷனல் குயிக்-ஷிஃப்டர் உடன் வருகிறது. மேலும் ஒரு Panigale V4 கிளட்ச் கவர் எஞ்சினின் வலது பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
அதே நேரம் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 எஸ்மாடல் அதிக விலையுயர்ந்த Ohlins NIX30 ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் Ohlins TTX36 மோனோ-ஷாக் உள்ளிட்டவற்றுடன் வருகிறது. இவை இரண்டுமே மின்னணு முறையில் அட்ஜஸ்ட் செய்ய கூடியவை. மறுபுறம் ஸ்டாண்டர்ட் மாடலில் (Streetfighter V4), முற்றிலும் அட்ஜஸ்ட் செய்ய கூடிய ஷோவா பிக் பிஸ்டன் ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் சாக்ஸ் மோனோ-ஷாக் உள்ளது. பைக்கின் பிரேக்கிங் சிஸ்டமானது டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் இரண்டு 330மிமீ ஃப்ரன்ட் டிஸ்க்ஸ் மற்றும் ஒரு 245மிமீ ரியர் டிஸ்கை கொண்டுள்ளது.
அம்சங்கள்…
புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மாடல் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது மற்றும் ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என மொத்தம் 4 நான்கு பவர் மோட்ஸ்களுடன் வருகிறது. ஹை மற்றும் மீடியம் செட்டிங்ஸ்களுக்கு, நிறுவனம் குறிப்பிட்ட கியர் காலிப்ரேஷனுடன் புதிய ரைட் மேப்-ஐ வெளியிட்டுள்ள, அதே நேரத்தில் ஃபுல் மற்றும் லோ செட்டிங்ஸ் முற்றிலும் புதியவை. அதே போல குறைந்த கிரிப் அதாவது பிடிமான சூழ்நிலைகளில் ரைடரின் பாதுகாப்பை அதிகரிக்க, பைக் இப்போது ஒரு புதிய Wet மோட் உடன் வருகிறது.
இந்த பைக் முந்தைய மாடலை விட 1.7 கிலோ எடை குறைவான லித்தியம் அயன் பேட்டரியை கொண்டுள்ளது. பைக்கின் சில குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களில் வீலி கன்ட்ரோல், ஸ்லைடு கன்ட்ரோல், ரிபோசிஷன் ஸ்விங்கார்ம் பிவோட், கார்னர்ரிங் ஏபிஎஸ் ஈவிஓ, ட்ராக்ஷன் கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோ டயர் காலிப்ரேஷன் உள்ளிட்டவை அடங்கும். டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 17-இன்ச் அலாய் வீல்களைக் கொண்டுள்ள அதன் நேரம், டாப்-எம்ட் மாடலான வி4 எஸ்-ல் அலுமினிய வீல்கள் உள்ளன.