ஜனவரி 1: பல விஷயங்கள் தலைகீழாக மாறபோகிறது.. உஷாரா இருங்க மக்களே..!!
இதுபோன்ற விதிகள் மாதத்தின் முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்படுகின்றன. அப்படி 2024 புத்தாண்டில் ஜனவரி 1 முதல் அமலாக்கப்பட உள்ள புதிய விதிகள் பற்றி இனி விரிவாகப் பார்க்கலாம். சிம் கார்டுகளுக்கான பேப்பர்லெஸ் கேஒய்சி: தற்போது நடைமுறையில் உள்ள பேப்பர் சார்ந்த கேஒய்சி பதிவு முறைகளுக்கு பதிலாக இனி
பேப்பர்லெஸ் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.இருப்பினும் புதிய மொபைல் இணைப்புகளை வாங்குவதற்கான விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதுவரை வங்கிகளில் கேஒய்சி விவரங்களை ஜெராக்ஸ் காபி எடுத்து வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இனி அந்த அவசியம் இல்லை. வாட்ஸ் அப் அல்லது இமெயிலில் வேண்டிய விவரங்களை அனுப்பினால் போதும். செயலற்ற UPI கணக்குகளை மூடுதல்: தேசிய பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன்
செயலற்று இருக்கும் யூபிஐ ஐடிகளை டீஆக்டிவேட் செய்யுமாறு ஆப்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் இருக்கும் யூபிஐ கணக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும். மலிவான சிலிண்டர்கள்: ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் (PMY) கீழ் தற்போதுள்ள ரூ.500இல் இருந்து ரூ.450க்கு வழங்கப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.50 மிச்சம் ஆகிறது. இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்: தாமதமான மற்றும் திருத்தப்பட்ட இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்களை தாக்கல் செய்வதற்கான
இறுதிக்கெடு டிசம்பர் 31 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக ஜூலை 31 ஆம் தேதி தான் வழக்கமான இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாகும். வரி செலுத்துவோர் தாமதமாக தாக்கல் செய்யும் இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். ஆனால் திருத்தப்பட்ட ரிட்டர்ன்களை இலவசமாக தாக்கல் செய்யலாம். ஏற்கெனவே தாக்கல் செய்த இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்களில் ஏதாவது பிழையோ அல்லது விவரங்கள் விட்டுப் போயிருந்தாலோ அதை திரும்பப் பெற்றுக் கொண்டு புதிதாக திருத்தப்பட்ட இன்கம்டாக்ஸ் ரிட்டர்னை தாக்கல் செய்யலாம் என்று
சில மாதங்களுக்கு முன்புதான் வருமான வரித் துறை அறிவித்திருந்தது. தற்போது திருத்தப்பட்ட ரிட்டர்ன்களுக்கு தாமதத்துக்கான அபராதம் விதிக்கப்படாது என்று கூறியுள்ளது. பேங்க் லாக்கர் ஆக்ரிமென்ட்: வங்கிகளில் லாக்கர்கள் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ரிவைஸ்டு பேங்க் லாக்கர் அக்ரிமென்ட்டில் கையெழுத்திட வேண்டும். தவறினால் மறுநாளே அவர்களது லாக்கர்கள் முடக்கப்படும். இதனால் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த அக்ரிமென்டில் வாடிக்கையாளர்கள் கையெழுத்திட வேண்டும் என வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.