இனி கனடா நாட்டில் பிறநாட்டவர்கள் வேலை செய்ய முடியாதாம் ..! செக் வைத்த அரசு..!
கனடா நாட்டில் பிற நாட்டிலிருந்து வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனை கவனித்த கனடா அரசு இது குறித்த அதிரடியான முடிவை பிறப்பித்திருக்கிறது.கடந்த சில வருடங்களாக கனடாவிற்கு வேலைக்காக குடிப்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தற்காலிக பணிக்காக நியமிக்கப்படும் பிறநாட்டு நபர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என திட்டமிடப்பட்டிருக்கிறது கனடா.
தற்போது 2.5 மில்லியன் எண்ணிக்கையில் பிறநாட்டைச் சேர்ந்த தற்காலிக பணியாளர்கள் இருக்கிறார்கள். இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் 6.2% ஆகவும் இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த 6.2 சதவீதத்தை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்த டார்கெட் கனடாவின் மாகாணங்களில் இருப்பவர்களுடன் கலந்தாலோசனை செய்தபிறகு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது தற்காலிக பணிக்காக பிற நாட்டிலிருந்து வருபவர்களுக்கான இந்த கட்டுப்பாடுகள் மே 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.மேலும் இதோடு சேர்ந்து மாணவர்களுக்கான விசா மற்றும் பிற பயனாளிகளுக்கான விசா கட்டுப்பாடுகளும் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கனடாவில் தற்போது இருக்கக்கூடிய வேலை சந்தை மிகவும் இறுக்கமாக இருப்பதாகவும், நாட்டின் மக்கள் தொகை அதிகரிப்பதால் அதிகப்படியான வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் வருவதால் வேலைக்கான தட்டுப்பாடு ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டு வேலை ஆட்களின் சதவிகிதம் 30ஆக இருப்பதாகவும் இதனை 20 சதவிகிதத்திற்கு குறைக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்