சாணக்கிய நீதி படி இந்த 4 நபரை நீங்க வாழ்க்கையில் யாரையும் நம்பக்கூடாதாம்… இல்லனா நீங்காத ஏமாறுவீங்க…!
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படும் போது, மகன்கள், மகள்கள், மனைவி மற்றும் கடவுளின் பக்தர்கள் மட்டுமே இந்த துன்பமான நேரத்தில் ஆதரிக்கிறார்கள்.
ஆச்சார்ய சாணக்கியர் வாழ்க்கையின் மகிழ்ச்சி, துக்கம் மற்றும் வாழ்க்கையின் பிரச்சனைகள் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளைப் பற்றி விவாதித்துள்ளார். அதே சமயம், அவற்றின் தீர்வு குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.
சாணக்கியக் கொள்கையின்படி உயிர் இருந்தால்தான் இன்பமும் துன்பமும் ஏற்படும். ஒரு சீரான வாழ்க்கையை நடத்துவதன் மூலம் அவற்றைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். இதன்படி, ஒரு நபர் பிறப்பதற்கு முன்பே, தாயின் வயிற்றில், அவரது மரணம் மற்றும் வாழ்க்கையின் சில சம்பவங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி சாணக்கியர் கூறியுள்ள விரிவான விஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அறிவே செல்வத்திற்கான ரகசியம்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, அறிவை அடைவது காமதேனுவைப் போன்றது, இது ஒவ்வொரு பருவத்திலும் உங்களுக்குத் தேவையான அமிர்தத்தை வழங்குகிறது. அறிவு உங்களுக்கு இக்கட்டான சூழலில் காப்பாற்றும் கவசமாக இருக்கும். அதனால்தான் கல்வி கற்பது என்பது செல்வத்திற்கான ரகசியம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் நல்ல கல்வியைப் பெற்றாலே அவரின் வாழ்க்கையின் வறுமையை விரட்டி விடலாம்.
பிறப்பதற்கு முன் நிச்சயிக்கப்பட்டவை
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபர் பிறப்பதற்கு முன்பே, தாயின் வயிற்றில் அவரது மரணம், அவரது செயல்கள் மற்றும் அவரது வாழ்க்கையில் எவ்வளவு சொத்து இருக்கும் போன்றவை நிர்ணயிக்கப்பட்டவை, இந்த விஷயங்கள் அவர் பிறப்பதற்கு முன்பே உறுதி செய்யப்படுகின்றன. இந்த விஷயங்களை நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் மாற்ற முடியாது, உங்களின் விதியை ஏற்றுக்கொள்வதே ஒரே வழி.
நல்லொழுக்கம் உள்ள மகன்
சாணக்கிய நீதியின் படி, நற்குணங்கள் இல்லாத நூற்றுக்கணக்கான மகன்களை விட ஒழுக்கம் உள்ள ஒரே மகன் சிறந்தவர் என்கிறார் சாணக்கியர். ஏனெனில் சந்திரன் மட்டுமே இரவின் இருளை நீக்குகிறது. எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து இருளை அகற்றாது.
அதேபோல்தான் ஒழுக்கமுள்ள மகன் ஒரு குடும்பத்தின் இருளை போக்கி அவர்களின் குடும்பத்தை ஒளியை நோக்கி அழைத்து செல்வார். ஒரு ஒழுக்கமுள்ள மகன் அவர்களின் தலைமுறையையே மாற்றக்கூடியவர்.
துன்பத்தின் போது ஆதரவு கொடுப்பவர்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் துக்கங்கள் வரும்போதும், ஒரு நபர் சோகத்தால் எரியும் போதும், அவரது மகன், மகள், மனைவி மற்றும் கடவுள் மட்டுமே இந்த துக்கமான தருணங்களில் அவரை உண்மையாக ஆதரிக்கிறார்கள். இவர்களைத் தவிர நீங்கள் வேறு யாரை நம்பினாலும் அவர்கள் உங்களுக்கு வெற்று ஆதரவைத் தருவார்கள். அவர்களை சார்ந்திருப்பது உங்களுக்கு சிக்கலை மட்டுமே உண்டாக்கும்.