இன்று முதல்கட்ட பிரச்சாரத்தை துவங்குகிறார் அமைச்சர் உதயநிதி..!
மத்திய சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தனது முதல் கட்ட பிரசாரத்தை சென்னை சேப்பாக்கம் தொகுதியில் இன்று காலை 8.30 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்கிறார். சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்து உள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார்.
இது தொடர்பாக சேப்பாக்கம் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான எஸ்.மதன் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குவதால் சேப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் வட்ட செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் பிரசாரத்தை தொடர்ந்து மறுநாள் திருச்சுழியில் சுற்றுப் பயணம் செய்கிறார்.