Baakiyalakshmi: உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன்! செழியன் மிரட்டலால் நடுங்கிய மாலினி
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி தன்னை விட்டு பிரிந்து செல்வதற்கு காரணமான மாலினியை நேரடியாக வந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார் செழியன்.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வந்த நிலையில் தற்போது எதிரியாக மாறி வருவதுடன், கோபிக்கு தனியாக உணவகம் ஒன்றினை வைத்து கொடுத்துள்ளார். இதனால் பாக்கியாவின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெனியின் தந்தை ஜெனிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப் போவதை தெரிந்த செழியன் அவரது வீட்டிற்கு சென்று அடிவாங்கிக்கொண்டு திரும்பினார்.
தற்போது இந்த பிரச்சினைக்கு எல்லாம் காரணமாக இருந்த மாலினியை செழியன் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். செழியன் வேறொரு முகத்தை அவதானித்த மாலினி நடுநடுங்கிப் போயுள்ளார்.