உதயமான சனியால் 4 ராசிகளுக்கு மகிழ்ச்சி அஸ்தமனம்! எச்சரிக்கை அவசியம்!

ஜோதிடத்தில் கர்ம காரகன் எனப்படும் கர்மத்தை கடத்தும் காரகனாக அழைக்கப்படும் சனீஸ்வரர், பிற எட்டு கிரகங்களை விட மிகவும் மெதுவாக நகர்பவர் என்பதால், அவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். தற்போது கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், அவரவர் ஜாதகத்திற்கு ஏற்பவே பலன் அளிப்பார் என்றாலும், ஒவ்வொரு ராசிக்கும் சனி பெயர்ச்சியின் பொதுவான பலன்களை ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஒவ்வொருவரின் ஜாதகமும் ஒவ்வொரு தனித்தன்மை உடையது என்ற நிலையில், ஏன் பெரும்பாலானவர்கள் ஏழரை சனி ,அஷ்டம சனி நேரங்களில் கஷ்டப்படுகின்றனர் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. லக்னம் வலுபெற்று யோகத்தை தரும் கிரகங்கள், அசுபமாக ஜாதகத்தில் அமர்ந்திருந்தால் அஷ்டம சனி, ஏழரை சனி போன்ற தீய கோச்சார நிலைகளினால் தீயபலன்கள் அதிகரித்துவிடுகின்றன.

பிறந்ததில் இருந்தே சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருபவர்கள்கூட, ஏழரை சனியோ அஷ்டம சனியோ நடக்கும்போது ஏதோ ஒரு காரணத்தால் மனதில் கவலையுடன் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் தசாபுக்திகள் நன்றாக இருந்தால் சொகுசு வாழ்க்கையில் இருந்துக் கொண்டே நிம்மதியற்று இருப்பார்கள்.

ஒவ்வொருவரின் ஜாதகமும் ஒவ்வொரு தனித்தன்மை உடையது. மார்ச் 29, 2025 வரை கும்பத்தில் சஞ்சாரம் செய்யும் சனீஸ்வரர், ஆண்டுக்கு ஒருமுறை வக்ரமடைகிறார். சனிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று ஒன்பதாம் வீட்டிற்கு சூரியன் வரும் போது வக்ர நிவர்த்தியடைவார்.

இந்த நிலையில், மார்ச் 18ஆம் தேதி கும்பத்தில் உதயமான சனி பகவானின் கடைசி கும்ப உதயம் இதுதான். இனி அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி அவர் அஸ்தமனம் ஆனபிறகு மீன ராசிக்கு சென்றுவிடுவார்.சனி உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் சில ராசிகளுக்கு மிகவும் மோசமான கெடுபலன்கள் ஏற்படும். சனியின் தற்போதைய கும்ப ராசி சஞ்சாரத்தால் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய ராசிகள் (Zodiac Signs) எவை என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

கடக ராசி (Cancer)

சனி பகவானின் உதயத்தினால் கடக ராசியினருக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பத்து மாத காலம் நீடிக்கும் சனியின் தாக்கத்தினால் கடக ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வருமானத்தில் பிரச்சனை ஏற்படலாம். பணி புரிபவர்கள் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாமல் மிகவும் கவனமாக இருந்தால் நல்லது. பொறுத்தார் பூமியாள்வார் என்ற வார்த்தையை கடைபிடித்தால் இந்த மோசமான காலகட்டத்தை சுலபமாக கடந்துவிடலாம்.

விருச்சிக ராசி (Scorpio)
சனி பகவானின் கும்ப ராசி இருப்பினால் விருச்சிக ராசியினருக்கு மன நிம்மதி குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனத்துடன் கையிஆளவும். உள்ளுக்குளே பயம் இருந்தாலும் வெளியில் தைரியாமாக காட்டிக் கொள்ளும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சங்கடமான சூழ்நிலை உருவாகும். ஆனால் சாதுரியமாக சமாளிக்கும் உங்கள் திறமையை இதில் பயன்படுத்துங்கள்.

மகர ராசி (Capricon)

சனி உதயம், மகர ராசிக்காரர்களுக்கு சற்று கவலையை தரக்கூடிய காலமாக இருக்கும். எந்த வேலையையும் நிலுவையில் வைக்காமல் முடித்துவிடுங்கள். இல்லையென்றால், பணியிடத்தில் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைமை ஏற்படும். ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால், சனி பகவான் உங்களை கடினமாக உழைப்பு வைத்துவிடுவார். உண்மையில் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் படிப்பினைகள் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கும்.

கும்ப ராசி (Aquarius)

ஏழரை சனியின்பிடியில் இருக்கும் கும்ப ராசியினருக்கு வாய்க்கட்டுப்பாடு அவசியம். பணியிடத்திலும் தொழில் இடத்திலும் அதிக கவனத்துடன் செயல்படவும். இல்லாவிட்டால், வீண் அபவாதம் வந்து சேரும், பண விரயத்திற்கான காலமாகவும் இருப்பதால் கவனத்துடன் செயல்படவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *