தைராய்டு பாதிப்பில் இருந்து தப்பிக்கணுமா? ‘இந்த’ ஜூஸ்களை குடிங்க..
சமீப காலமாக மகளிர் மத்தியில் அதிகம் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோய்களுள் ஒன்றாக இருக்கிறது, தைராய்டு. அதிலும், 25 வயதில் இருந்து 45 வயதிற்குள் இருக்கும் பெண்கள்தான் தற்போது அதிகமாக நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு மருத்துவ ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தைராய்டு நோய் பாதிப்பு:
தைராய்டு நோய் சைலண்ட் கில்லர் நோய் பாதிப்புகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம், இந்த நோய் பாதிப்பு உடலில் இருந்தால் அது இருப்பதே தெரியாது என்று மருத்துவர்களால் கூறப்படுகிறது. இந்த நோய் தன் உடலில் இருக்கும் விஷயமே பல பெண்களுக்கு தெரியாது. அதிலும், குறிப்பாக தைராய்டு நோயால் பாதிக்கப்படுவது, குழந்தை பெற்ற பெண்கள்தான் என்று கூறப்படுகிறது. இதை சரிசெய்ய, பல ஆயிரங்களை செலவு செய்து மருத்துவர்களிடம் செல்கின்றனர். இதற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளும் அவர்களுக்கு பல்வேறு வகையில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பெண்களை அச்சுறுத்தும் நோய்!
தைராய்டு, பெரும்பாலும் பெண்களுக்கு கழுத்தி கீழ் பகுதியில் இருக்கும் சுரப்பியில் வரும். இந்த உறுப்பு உருவத்தில் சிறியதாக இருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கிறது. இந்த உறுப்புதான் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் பாதிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது மகளிர்தான்.
தைராய்ட்டை வீட்டு வைத்தியத்திலும் குறைக்கலாம்..
தைராய்டு நோய் பாதிப்புகளை குறைக்க, சில வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. அதே போல, உணவு பழக்கத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டால் இந்த நோய் பாதிப்பின் தாக்கம் குறையும். அது மட்டுமன்றி, இந்த வீட்டு வைத்தியங்களை எடுத்துக்கொண்டால் மருத்துவ சிகிச்சைகளும் எளிதாக முடியும்.
தைராய்டு ஜூஸ்:
இயற்கை கொத்தமல்லி ஜுஸ்:
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா?
>கொத்தமல்லி இலைகள், ஒரு கைப்பிடி
>ஒரு மாதுளம்பழம்
>கேரட் 1
>பூசணி விதைகள்-1 டீஸ்பூன்
>சூரிய காந்தி விதைகள் – 1டீஸ்பூன்
எப்படி செய்வது?
>மேற்கூறிய விதைகளை தவிர,பிற பொருட்களை எடுத்து அவற்றுடன் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அதனுடன் விதைகளை போட்டு அரைக்கவும். இதை தைராய்டு நோய் பாதிப்பு இருப்பவர்கள் குடித்தால் சரியாகும்.
கொத்தமல்லி விதை ஜூஸ்:
இதை செய்ய தேவையான பொருட்கள்:
>தேவையான அளவு தண்ணீர்
>கொத்தமல்லி விதைகள்-2 டீஸ்பூன்
>கறிவேப்பிலை இலைகள்-10-12
>உலர்ந்த ரோஜ இதழ்கள்-ஒரு கைப்பிடி
எப்படி செய்வது?
தைராய்டு நோய் பாதிப்பு உள்ளவர்கள், இந்த ஜூஸை குடிக்கலாம். முதலில் தண்ணீருடன் சேர்த்து கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர் ரோஜா இதழ்களை சேர்த்து அதை அடுப்பில் வைத்து 7-8 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்க வேண்டும். இது ஆறியதும், எடுத்து குடிக்கலாம்.