Adulteration: அதிர வைக்கும் உப்பு கலப்பட செய்திகள்! கலப்பட உப்பை கண்டறிவது எப்படி?

சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பொருட்களில் கலப்படம் இருப்பதால் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மசாலாப் பொருட்களில் இருந்து தேயிலை, மாவு, பிஸ்கட், எண்ணெய், பருப்பு வகைகள், நெய் என அனைத்துப் பொருட்களிலும் கலப்படம் செய்யப்படுகிறது. அதிலும் உப்பிலும் கலப்படம் செய்யப்படுவது அதிர்ச்சியையும் கவலைகளையும் ஏற்படுத்துகின்றன.

உப்பு என்பது நமது உணவின் அடிப்படையான பொருளாக இருக்கிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது முதுமொழி மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கான அடிப்படை மந்திரம் இது. உப்பு கடல் நீரில் இருந்து இயற்கையாக கிடைக்கிறது, உப்பில் பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தான் அது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், உப்பில் கலப்படம் செய்வது பரவலாகிவிட்டது. கலப்பட்ட உப்பு உண்பதால், வழக்கமாக உடலுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ குணங்கள் கிடைப்பதில்லை.

அதோடு, உடலில் பல கோளாறுகளையும் கலப்பட உப்பு ஏற்படுத்துகிறது. அயோடின் குறைபாடு கோளாறு (Iodine Deficiency Disorder (IDD)) போன்ற பல பிரச்சனைகளும் ஏற்படும். கலப்பட உப்பு ஏற்படுத்தும் பல பிரச்சனைகளை தெரிந்துக் கொள்வும். கப்பட உப்பு உண்அதால், மூளையின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும்.

கலப்பட உப்பை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வி பலருக்கும் உண்டு. ஆனால், பொதுவாக உப்பில் கலப்படம் என்பது எளிதில் கண்டறியப்படாத ஒன்றாக இருக்கிறது. கலப்பட உப்பை அறியாமலேயே நாம் உண்டு நமது ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறோம்.

கலப்படத்தின் மோசமான உப்பு

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் கலப்படம் இல்லாததா என்பது பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கும் நிலையில், விலை அதிகமாக இருந்தாலும் நாம் வாங்கும் பொருட்கள் நமது ஆரோக்கியத்திற்கே எதிரியாக மாறுகிறது என்பது யாரும் எதிர்பாராதது.

நாள் முழுவதும் நமது உணவில் பயன்படுத்தப்படும் விலை மலிவான உப்பு கூட கலப்படத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? உப்பில் கலப்படம் என்பது எளிதில் தெரிவதில்லை என்பதால்தான் கலப்பட உப்பு என்பது தெரியாமலேயே பயன்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள்.

சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு

நாம் வழக்கமாக சமையலில் பயன்படுத்துவது, அயோடின் செறிவூட்டப்பட்ட உப்பின் சுத்திகரிக்கப்பட்ட பதிப்பு ஆகும். சுத்திகரிக்கப்பட்ட உப்பு வெண்மை நிறத்தில் இருக்கும். எந்த உணவுப் பொருளுடனும் இயல்பாக கலக்கும் தன்மை கொண்டது சமையல் உப்பு.

சமையல் உப்பின் தூய்மையை எளிதாக கண்டறிய சில வழிகள் உள்ளன. அவை சுலபமானவை தான். நாம் உட்கொள்ளும் உப்பின் தூய்மையைக் கண்டறிய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Commission of India) வழங்கும் எளிய உதவிக்குறிப்புகள் இவை.

தண்ணீர் பரிசோதனை

பொதுவாக வெண்மை நிறமுள்ள உப்பில், அதே வண்ணத்தில் உள்ள சுண்ணாம்பு கலக்கப்படுகிறது. இந்த கலப்படத்தைக் கண்டறிய, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து நன்றாக கலக்கவும். உப்பில், சுண்ணாம்பு கலப்படம் செய்யப்பட்டிருந்தால், நீர் வெண்மை நிறமாக மாறும். கரையாத அசுத்தங்கள் நிரீன் அடியில் படியும்.

உருளைக்கிழங்கு பரிசோதனை

உருளைக்கிழங்கு ஒன்றை இரண்டாக வெட்டவும். உருளைக்கிழங்கின் நறுக்கிய பகுதியில் உப்பு பொடியை தூவி ஒரு நிமிடம் அப்படியே விட்டுவிடவும். பிறகு, உருளைக்கிழங்கில், இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும். உப்பு கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், உருளைக்கிழங்கின் மேற்பரப்பு நீல நிறமாக மாறும்.

உங்கள் வீட்டில் இருக்கும் உப்பு கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், அதை தொடர்ந்து பயன்படுத்தும்போது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?

கலப்பட உப்பை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலக் கேடுகள்

கலப்பட உப்பை உட்கொள்வதால் கடுமையான கல்லீரல் நோய்கள் ஏற்படும்
கலப்பட உப்பை சாப்பிடுதால், செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. வயிற்றில் எரியும் உணர்வு மற்றும் வலி அதிகரிக்கலாம்
வயிற்றில் வாயு உருவாகுவதால் அவதிப்படுபவர்கள் கலப்பட உப்பை சாப்பிடுவதால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்
கலப்பட உப்பு தொடர்ந்து உட்கொள்வதால் மூளை மற்றும் சிறுநீரகங்களுக்கும் தீங்கு விளைவிக்கும், அதோடு சிறுநீரக கற்கள் உருவாகலாம்.
உப்பு கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், உடலில் யூரியா அளவு அதிகரிப்பது மற்றும் கீல்வாதம் பிரச்சனை அதிகரிக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *