பா.ம.க. வேட்பாளர்களில் 30% மகளிர்; 20% பட்டியலினம்; இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!
நாடாளுமன்ற தேர்தலில் பாமக, பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாட்டளி மக்கள் கட்சி போட்டியிடும் நிலையில், வேட்பாளர்கள் பெயர்களை வெளியிட்டது. இது குறித்து கூறிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் ( காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.
தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று!
அதே போல். பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்ல்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.
இதற்கு முன் 1999 மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், இராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!
அதிமுகவுடன் கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமக பாரதீய ஜனதா கட்சியுடன் போட்டியிட முடிவு செய்துள்ளது அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.