Work from home கேள்விப்பட்டிருப்பீங்க, ஆனா இது Work from Traffic.. பெங்களூரில் டிரெண்டிங் சம்பவம்..!

பெங்களூரு என்றவுடனே பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வருவது அங்கு நிலவக்கூடிய போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தான், லேட்டெஸ்ட் ஆக தண்ணீர் பிரச்சனை. பெங்களூருவை பூர்வீகமாக கொண்டவர்களும், அங்கேயே தங்கி பணியாற்றுபவர்களிடமும் பேசும்போது நிச்சயம் போக்குவரத்து நெரிசல் குறித்து புலம்புவார்கள்.

பெங்களூரு டிராபிக்கை கடந்து பணிக்கு சென்று விட்டு திரும்ப வீடு திரும்புவது என்பது மிகப்பெரிய சாதனை பயணமாக இருக்கும் என்பது தான் இங்கே வசிப்பவர்களின் கருத்து. ஆனால் இப்படி போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நேரத்தை கூட நாம் உபயோகமாக பயன்படுத்தலாம் என எக்ஸ் தளத்தில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருந்தபோது தன்னுடைய சக பணியாளருடன் நிறுவனத்தின் மேம்பாடு குறித்து ஆரோக்கியமாக கலந்துரையாடியதை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அங்கித் பரேஷர் என்பவர் சால்ட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனர். இவர் பெங்களூருவில் தன்னுடைய அலுவலகத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது சிக்னலில் வாகனம் நின்றிருக்கிறது. நீண்ட நேரமாக சிக்னலில் நின்றிருந்த அவர், தன்னுடைய காருக்கு அருகில் இருசக்கர வாகனத்தில் ஊழியர் ஒருவர் இருப்பதை கண்டுள்ளார்.

இதனை அடுத்து இருவரும் பேச தொடங்கி நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து விவாதித்துள்ளனர். இதனை பரேஷர் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

பெங்களூருக்கு செல்வதற்கு முன்பு, இந்நகரம் ஸ்டார்ட் அப்களுக்கான நகரம் என்றும், அதே வேளையில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரம் என்பதையும் நான் கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் இன்று இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டது என கூறியுள்ளார்.

போக்குவரத்து நெரிசல் சிக்கிக் கொண்ட நானும் எனது ஊழியரும் எங்கள் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசித்தோம் என தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலால் நாங்கள் அலுவலகத்திற்கு தாமதமாக செல்கிறோம், இருந்தாலும் இந்த நேரத்தை உபயோகமானதாக பயன்படுத்திக் கொண்டோம் என தெரிவித்துள்ளார்.

பரேஷின் இந்த பதிவுக்கு ஏராளமான பயனாளர்கள் பல்வேறு வித்தியாசமான யோசனைகளுடன் கூடிய பதில்களை அனுப்பியுள்ளனர். ஒரு பயனாளர் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்பதைப்போல ஒர்க் ஃப்ரம் ட்ராபிக் என்ற புது மாடலை பெங்களூரில் உள்ள நிறுவனங்கள் கொண்டு வரலாம் என கிண்டலாக யோசனை தெரிவித்துள்ளார்.

அடுத்த மீண்டும் ஒருமுறை இதேபோல போக்குவரத்து நெரிசல் சிக்கிக் கொள்ளும் போது நீங்கள் வொர்க் பிரம் டிராபிக் என்ற புதிய கான்செப்ட் குறித்து விவாதித்து நடைமுறைப்படுத்தலாமே என மற்றொருவர் கூறியுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *