ஒன்றுக்கு மேற்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் வைத்திருப்பதால் கிடைக்கக்கூடிய நன்மை மற்றும் தீமைகள்!!!
நம் அனைவருக்கும் தெரிந்தபடி ஆரோக்கியமான ஒரு நபர் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் ஒரு அடையாளமாக திகழ்கிறார். எனினும் வெற்றிப்பாதையை நோக்கிய பயணத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை எப்போதும் பராமரிப்பது மிகவும் அவசியம். ஒருவேளை துரதிஷ்டவசமாக நீங்கள் ஏதேனும் உடல்நல கோளாறினால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் அதற்கான சிகிச்சையை பெற்று உங்கள் உடல் நிலையை கவனித்துக் கொள்வது முக்கியம். மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைவருமே ஒரு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்துக் கொள்வது தற்போது அத்தியாவசியமாக கருதப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவதற்கு திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் கட்டாயமாக நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை வாங்க வேண்டும். அதாவது ஒரு பாலிசி அடிப்படை பாலிசியாகவும், மேற்படி டாப் அப் பாலிசிகளையும் வாங்கிக் கொள்ள வேண்டும். “இப்படி பல பாலிசிகளை வாங்கும் பொழுது என்னுடைய பலன்களும் இரட்டிப்பாகுமா?” என்ற கேள்வி இப்பொழுது உங்கள் மனதில் எழலாம்.
ஒருவேளை உங்களிடம் இரண்டு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகள் இருந்தால் உங்களுடைய அடிப்படை பாலிசியை பயன்படுத்தி நீங்கள் ஒரு கிளைம் செய்யலாம் மற்றும் மீதமிருக்கக் கூடிய தொகையை டாப் அப் பாலிசி மூலமாக கிளைம் செய்யலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள்.
கிளைம் நிராகரிக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது
அவசரகால சூழ்நிலையின் பொழுது ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்குனர்கள் உங்களது கிளைம்களை நிராகரித்து விட்டால் அது உங்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தலாம். இக்கட்டான இந்த சூழ்நிலையில் அதிகப்படியான மருத்துவ செலவுகளை நீங்கள் உங்கள் சொந்த பணத்தை செலவு செய்து பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு இன்சூரர் உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைமை நிராகரித்து விட்டால் கூட மற்றொருவர் அதனை ஏற்க வாய்ப்புள்ளது. இதன் மூலமாக நீங்கள் உங்களுடைய முழு கிளைம் தொகையை பெறலாம்.
சௌகரியம்
ஒரே இன்சூரர் மூலமாக பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை நீங்கள் பராமரிக்கும் பொழுது செயல்முறை எளிதாக்கப்படுவதோடு, ஒவ்வொரு பாலிசிக்கும் நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை.
பல்வேறு பாலிசிகளுக்கான அணுகல்
பல்வேறு பாலிசிகளை பெற்றிருப்பது உங்களுடைய கவரேஜை விரிவாக்கி அதிக பலன்களை பெறுவதற்கு உங்களுக்கு உதவும். ஒருவேளை உங்களுக்கு பெரிய அளவிலான காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பதால் நிகழக்கூடிய பின்னடைவுகள்
வித்தியாசமான விதிகள் மற்றும் நிபந்தனைகள்
ஒரு கிளைமை நீங்கள் தாக்கல் செய்யும் பொழுது ஒவ்வொரு திட்டத்திற்கும் வெவ்வேறான விதிகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கும். ஒவ்வொரு முறையும் அதற்கான செயல்முறைகளை நீங்கள் ஆய்வு செய்து பார்க்க வேண்டி இருக்கலாம்.
சிக்கலான கிளைம் செயல்முறை
பல்வேறு பாலிசிகளை நீங்கள் வைத்திருக்கும் பொழுது உங்களுடைய கிளைம் செயல்முறை மிகவும் சிக்கலானதாக மாறுகிறது. ஏனெனில் நீங்கள் பல்வேறு இன்சூரர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம்.
காப்பீடு போலியாவதற்கான வாய்ப்புகள்
ஒரு பாலிசியில் உங்களுக்கு கிடைக்கக்கூடிய பலன் மற்றொரு பாலிசியிலும் இருக்கும் பட்சத்தில் அதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படலாம்.
இறுதியாக பல்வேறு ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருப்பது நிச்சயமாக உங்களுக்கு பலனளிக்க கூடிய ஒன்றுதான். கூடுதல் அல்லது விரிவான காப்பீட்டை பெறுவதற்கு இது உங்களுக்கு உதவும். அனைத்து விதமான எதிர்பாராத அவசரகால சூழ்நிலைகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நீங்கள் ஒரு அடிப்படை ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் குறிப்பிட்ட உடல்நல கோளாறு சம்பந்தப்பட்ட டாப் அப் பாலிசிகளை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.
ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்திருந்தால் ஒரே மருத்துவ சிகிச்சைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை கிளைம் செய்யலாம் என்ற அர்த்தம் கிடையாது. உங்களுடைய கிளைம் தொகை 100 சதவீத சிகிச்சை செலவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்கும் முன்பே பல்வேறு இன்சூரன்ஸ் வழங்குனர்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கு தகுந்த ஒன்றை தேர்வு செய்வது அவசியம்.