உகண்டாவின் இராணுவத் தளபதியானார் உகண்டா ஜனாதிபதியின் மகன்
உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனி தனது மகன் முஹ சி கைனெருகபாவை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
48 வயதான முஹ சி கைனெருகாபா, இராணுவத்தில் ஒரு ஜெனரலாக பதவி வகிக்கும் நிலையில் குறித்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
கென்யா ஆக்கிரமிப்பு
கடந்த 2022ஆம் ஆண்டில், சமூக ஊடக தளமான எக்ஸ் தள பதிவு ஒன்றில் அண்டை நாடான கென்யாவை ஆக்கிரமிக்கப் போவதாக மிரட்டல் விடுத்ததால், ஜனாதிபதி முசெவேனி தனது மகனை உகண்டாவின் தரைப்படைகளின் தளபதி நிலையிலிருந்து நீக்கினார்.
அதேநேரம், கைனெருகபா ரஸ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஆதரவை வெளிப்படுத்தியதோடு வெள்ளையர்கள் அல்லாத பெரும்பான்மை மனிதகுலம் உக்ரைனில் ரஸயாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .
இந்நிலையில், ஏறக்குறைய 40 ஆண்டுகளாக கிழக்கு ஆபிரிக்க நாடான உகண்டாவை ஆட்சி செய்து வரும் 79 வயதான தமது தந்தையிடமிருந்து ஜனாதிபதி பதவியை ஏற்க கைனெருகபா தயாராக இருப்பதாக நீண்ட காலமாக எதிர்ப்பார்ப்பு இருந்து வந்துள்ளது.