திமுக கூட்டணியில் ஏன் இணைந்தேன்? கமல் ஹாசன் தெளிவான விளக்கம்
மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கமலின் விளக்கம்
திமுக கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கமல் ஹாசன், “ஆரம்பத்தில் நற்பணி மன்றம் மூலம் மட்டும் சமூக சேவை செய்தால் போதும் என்று நினைத்தேன்.
அப்போது எனக்கு அரசியல் மீது வெறுப்பு இருந்தது. ஆனால், நல்ல விடயங்களை அரசியலுக்கு வந்தால் மட்டுமே செய்ய முடியும் என்று நினைத்ததால் அரசியலுக்கு வந்தேன்.
நான் மக்கள் நீதி மய்ய கட்சியை தனித்துவமாக நடத்துவேன் என்று சொல்லிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்ததற்கு பலரும் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால், அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் ஓரணியில் இணைந்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் நாட்டில் ஒரு சக்தியானது மதங்களை பிளவுபடுத்த நினைக்கிறது. அதுவும் மனிதர்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் கடப்பாரயை வைத்து குத்தி பிளவு ஏற்படுத்துகின்றனர்.
அதற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று நினைத்து தான் திமுக கூட்டணியில் இணைந்தேன். நான் நினைத்திருந்தால் 3 அல்லது 4 சீட்டுகள் கேட்டுருக்க முடியும்.
ஆனால், கூட்டணி வலுவாக வேண்டும் என்பதால் அதை செய்யவில்லை. இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்குவதற்கு ராகுல்காந்தி பொருத்தமானவர் என்று நான் நினைக்கிறேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.