இளவரசி கேட் மிடில்டனுக்கு பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து ஒரு செய்தி
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் என்ற செய்தி, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது எனலாம். உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இளவரசிக்கு ஆறுதலளிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள்.
இளவரசிக்கு பிரான்ஸ் ஜனாதிபதியிடமிருந்து ஒரு செய்தி
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான், எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மேன்மை தங்கிய இளவரசி அவர்களுக்கு, நீங்கள் கடந்து செல்லும் இந்த கடினமான நேரத்தில், நீங்கள் விரைவில் குணமடையவேண்டுமென என் மனைவி பிரிஜிட்டும் நானும் வாழ்த்துகிறோம் என்று குறிபிட்டுள்ளார்.
A message from Catherine, The Princess of Wales pic.twitter.com/5LQT1qGarK
— The Prince and Princess of Wales (@KensingtonRoyal) March 22, 2024
அத்துடன், உங்கள் பலமும் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறனும் எங்கள் அனைவரையும் உத்வேகப்படுத்துவதாக அமைந்துள்ளனன என்றும் குறிப்பிட்டுள்ளார் மேக்ரான்.