மக்களுக்கு அடுத்த ஷாக்..! தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்

உள்ள 5 சுங்கச்சாவடிகளில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிடடுள்ளது. அதன்படி, அரியலூர் – மணகெதி, திருச்சி – கல்லக்குடி, வேலூர் – வல்லம், திருவண்ணாமலை- இனம்கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 100 முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ. 5 முதல் 20 வரை உயர்ந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *