அலேக்கா, 12 வீடுகளை வாங்கிய ரேகா ஜூன்ஜூன்வாலா.. அதவும் ‘இந்த’ ஏரியாவுல.. வாவ்..!!
இந்தியாவில் மிகப்பெரிய தனிநபர் பங்குச்சந்தை முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் மறைவிற்கு பின்பு அவருடைய முதலீடுகள், சொத்துக்கள் அனைத்தும் ராகேஷ் மனைவி ரேகா நிர்வாகம் செய்து வருகிறார்.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா போலவே, ரேகா ஜூன்ஜூன்வாலா-வும் பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் மாறி மாறி முதலீடு செய்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் அவர்களது வீட்டுக்கு அருகிலேயே மற்றொரு சொத்தை வாங்கியுள்ளார் ரேகா. விலையே மட்டும் பாருங்க.
இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் ஆடம்பர ரியல் எஸ்டேட் சொத்துக்களை வாங்குவது தற்போது பெரிய அளவில் டிரெண்டாகி இருக்கும் வேளையில் தென் மும்பையின் பிரபலமான வால்கேஷ்வர் சாலையில், மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ள ரேகா ஜூன்ஜூன்வாலா-வுக்கு சொந்தமான 14 மாடி குடியிருப்பு Rare Villa அருகே உள்ள பழைய கட்டிடத்தில் 12 அப்பார்ட்மென்ட்-களை வாங்கியுள்ளார்.
இந்த 12 அப்பார்ட்மென்ட்களை சுமார் ரூ.156 கோடிக்கு மேல் கொடுத்து ரேகா ஜூன்ஜூன்வாலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து வங்கியுள்ளனர்.
50 ஆண்டுகள் பழமையான Rockside Apartments என்ற ஹவுசிங் சொசைட்டி-யில் தான் 12 அப்பார்ட்மென்ட்களை வாங்கியுள்ளார் ரேகா ஜூன்ஜூன்வாலா. தன்னுடைய Rare Villa-வில் இருந்து கடல் பார்வை மறைக்க கூடாது என்பதற்காகக் கடந்த சில மாதங்களாக, பல்வேறு கண்டிஷன்கள், மறுவடிவமைப்பு செய்வதில் நிபந்தனைகள் உறுதி செய்யப்பட்டு இந்த அப்பார்ட்மென்ட் வாங்கப்பட்டது
இந்த அப்பார்ட்மென்ட் ஒவ்வொன்றும் சராசரியாக 2100 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளன, மொத்தம் 26,119 சதுர அடி பரப்பளவு இருக்கும். கடந்த 2-3 மாதங்களில் நடந்த ஒப்பந்தங்களின் பதிவிற்காக ஸ்டாம்ப் டூட்டியாக மட்டும் குடும்பத்தினர் ரூ.9.02 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளதாக IndexTap.com மூலம் தெரிய வந்துள்ளது.
கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள 1,666 சதுர அடி பரப்பளவு கொண்ட ஃப்ளாட்டிற்கான சமீபத்திய ஒப்பந்தம் மார்ச் 15 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2023 நவம்பர் மாதம் தான் ரேகா ஜூன்ஜூன்வாலா-வின் கின்டிஸ்டோ எல்எல்பி நிறுவனம், மும்பையின் முக்கிய வணிக பகுதியான பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் (பிகேசி) மற்றும் அந்தேரியில் உள்ள வணிகக் வளாகத்தில் சுமார் ரூ.740 கோடி மதிப்புள்ள பிரைம் ஆஃபீஸ் இடத்தை வாங்கினார்.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் மறைவிற்குப் பின்பு அவருடைய முதலீட்டுகள், சொத்துக்கள் அனைத்தும் ராகேஷ் மனைவி ரேகா-வுக்கு வந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில் ரூ. 39,333.2 கோடிக்கும் அதிகமான நிகர மதிப்புள்ள 25 பங்குகளை அவர் வைத்திருந்தார்.