மாருதி சுசூகி என்ன இப்படி இறங்கிட்டாங்க.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவநமான மாருதி சுசூகி இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் எம்ஜி மோட்டார்ஸ் முதல் டாடா மோட்டார்ஸ் வரையில் களத்தில் இறங்கியிருக்கும் வேளையில், இப்போது டெஸ்லா இந்தியாவுக்கு கொண்டு மத்திய அரசு தனது EV கொள்கை மூலம் சிவப்பு கம்ளத்தை விரித்தள்ளது.
இந்த நிலையில் மாருதி சுசூகி அடுத்தடுத்த கார்களை எலக்ட்ரிக், ஹைப்ரிட் மாடலில் அறிமுகம் செய்ய காத்திருக்கும் வேளையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் புதிய முதலீட்டை செய்துள்ளது.
மாருதி டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான அம்ல்கோ லேப்ஸ் என்னும் நிறுவனத்தில் ரூ.1.99 கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அம்ல்கோ லேப்ஸ் நிறுவனம் டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், மெஷின் லேர்னிங் (ML), மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனமாகும்.
ஆட்டோமொபைல் துறைக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு நிறுவனத்தில் மாருதி சுசூகி முதலீடு செய்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அம்ல்கோ லேப்ஸ்-ன் தரவு சார்ந்த முடிவெடுக்கும் செயல்முறைகள் தான். இது மாருதி சுசூகி போல் அதிகப்படியான வாடிக்கையாளர் கொண்ட நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்பை டேட்டா அனலிட்டிக்ஸ் மூலம் அளிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த முதலீட்டின் மூலம் மாருதி சுசூகிக்கு அம்ல்கோ லேப்ஸ்-ல் 6.44% பங்குகளை பெற உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், மாருதி சுசூகி ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்வது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக ஜூன் 2022 இல் சோசியோகிராஃப் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டில் முதலீடு செய்திருந்தது.