என்ன திமிரா? கத்துக்குட்டி வீரரின் தவறான செயல்.. மயங்க் அகர்வாலை சீண்டிய இளம் இந்திய பவுலர்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 2024 ஐபிஎல் லீக் போட்டியில் கத்துக்குட்டி இந்திய வீரர் ஒருவர், இந்திய அணிக்காக ஆடி இரண்டு இரட்டை சதம் அடித்துள்ள மயங்க் அகர்வாலை சீண்டினார். அவரது தவறான செய்கை ரசிகர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தங்களின் முதல் 2024 ஐபிஎல் லீக் போட்டியில் மோதின. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது.

அந்த அணியின் துவக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஓவருக்கு 10 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி இலக்கை நெருங்க முடியும் என்பதால் இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். 5 ஓவர்களில் எல்லாம் விக்கெட் இழப்பின்றி 58 ரன்களை சேர்த்தது இந்த ஜோடி.

இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா பந்துவீச்சில் இரண்டு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து இருந்தார் மயங்க் அகர்வால். இந்த நிலையில் ஆறாவது ஓவரை வீசிய ஹர்ஷித் ரானா, மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்தினார்.

மயங்க் அகர்வால் அவுட் ஆகி வெளியேறும் போது அவரைப் பார்த்து சிரித்த ஹர்ஷித் ரானா அவருக்கு கைகளால் முத்தத்தை பறக்க விட்டு, பின் முறைத்துப் பார்த்தார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அனைவரும் இந்திய அணிக்காக ஆடி இருக்கும் ஒரு வீரரை, அதுவும் இரண்டு இரட்டை சதம் அடித்து இருக்கும் வீரரிடம் ஒரு இளம் இந்திய பவுலர் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *