ரஷ்யாவையே அதிர வைத்த பயங்கரவாத தாக்குதல்..’தேசிய துக்க தினம்’ என அறிவித்த புடின்

மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

பலி எண்ணிக்கை உயர்வு
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதல் நாட்டையே நடுங்க வைத்தது.

இச்சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாக முதலில் தெரிய வந்தது. அதன் பின்னர் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 133 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதுதொடர்பில் கைது செய்யப்பட்ட 11 பேரில், நான்கு சந்தேக நபர்கள் வெளிநாட்டு குடிமக்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய துக்க தினம்
Krasnogorsk-வில் உள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இச்சம்பவத்தை ”கொடூரமான மற்றும் கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்” என கடுமையாக கண்டித்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது உரையில், கொடூர சம்பவத்தை ”காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்” என்று குறிப்பிட்டதுடன், ‘தேசிய துக்க தினம்’ என அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் துணைப் பிரதமர் டாட்டியானா கோலிகோவா (Tatyana Golikova) கூறுகையில், மருத்துவ நிறுவனங்களில் 107 நோயாளிகள் உள்ளனர். அவர்களில் 3 குழந்தைகள், அதில் ஒரு குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என்றார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *