நமது வரலாற்றை வடிவமைத்தவருக்கு இறுதிவிடை கொடுத்தோம் – ஜஸ்டின் ட்ரூடோ உருக்கம்

கனடாவின் முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனியின் இறுதிச் சடங்கிற்கு பின் ஜஸ்டின் ட்ரூடோ உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரையன் முல்ரோனி
கடந்த மாதம் 29ஆம் திகதி முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி, தனது 84 வயதில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு சனிக்கிழமையன்று (நேற்று) நடந்தது. இதில் பிரையனை கௌரவிக்க அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் பொது மக்களுடன் கலந்து கொண்டனர்.

அப்போது பிரதமர் ட்ரூடோ, ”பிரையன் நமது வரலாற்றை வடிவமைத்தார். அவர் பெரிய விடயங்களை சரியாகப் புரிந்துகொண்டார். அவர் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ட்ரூடோ உருக்கம்
தென் ஆப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக பேசிய கனடாவின் மிகச் சிறந்த பிரதமர்களில் ஒருவராக இருந்த பிரையன் முல்ரோனி, 1980களில் அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளை உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில், ‘இன்று நாம் பிரையன் முல்ரோனியிடம் விடைகொடுத்தோம். ஆனால், தலைமுறை தலைமுறையாக அவர் காட்டிய முன் மாதிரியையும், பாரிய சாதனைகளுக்கு வழிவகுத்த அவரது துணிச்சலையும், இந்த நாட்டின் மீது அளவற்ற நம்பிக்கையையும் நாம் நினைவில் கொள்வோம். ஒரு நினைவுச் சின்னத்தை இழந்துவிட்டோம். உங்கள் ஆன்மாக அமைதிபெறட்டும் நண்பரே’ என பதிவிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *