விவாகரத்தான தயாரிப்பாளருடன் காதலா? நடிகை அஞ்சலிக்கு விரைவில் திருமணம்
நடிகை அஞ்சலி விவாகரத்தான தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரையில் இவர்களின் திருமணம் நடைபெறும் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது.
நடிகை அஞ்சலி
தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பினை ஆரம்பித்தவர் தான் நடிகை அஞ்சலி. இவரது திறமைக்கு தீனி போட்டது என்றால் அது தமிழ் சினிமா தான்.
ஆம் தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்து பல படங்களை நடித்து அசத்தினார்.
படுபிஸியாக நடித்த காலத்தில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருப்பதாகவும், இருவரும் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும், திருமணம் கூட செய்ய போவதாக தகவல் வெளியான நிலையில், இவர்களின் நண்பர்கள் இதற்று முற்றுப்புள்ளி வைத்தனர்.
இதுவரை காதல் குறித்து பேசாமல் இருந்த அஞ்சலி சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ளார். நபர் ஒருவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தினால் தனது நடிப்பினை கவனிக்க முடியாமல் போனது. மேலும் தன்னுடைய கேரியருக்கு தடையாக இருந்த உறவை விட, கேரியருக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் சிறந்தது என்று கூறியிருந்தார்.
தயாரிப்பாளருடன் காதலா?
தற்போது மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்துள்ள அஞ்சலி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார். தற்போது மீண்டும் அஞ்சலியின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஞ்சலி கடந்த ஒரு வருடமான விவாகரத்தான தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.