நீரிழிவு நோய் தங்களுக்கு ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள்…இந்த அரிசியை சாப்பிட்டு வாங்க..!
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெற வேண்டும். கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கருப்பு கவனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவுக்கு நார்ச்சத்து கிடைத்து மற்ற செரிமான உறுப்புகள் சீராக இயங்க உதவுகிறது. மேலும் உடல் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு உப்பசம் போன்ற செரிமான உறுப்புகள் தொடர்பான குறைபாடுகள் தோன்றுவதை தடுக்க முடியும். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கருப்பு கவனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.
கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். நீரிழிவு நோய் தங்களுக்கு ஏற்படக்கூடாது என நினைப்பவர்கள், அவ்வப்போது கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டும் எனவும் இந்த அரிசியின் மேல் இருக்கும் கருப்பு நிற பொட்டுகளில் குளுக்கோஸ் சத்து அதிகம் இருப்பதாகவும், இந்த அரிசியில் இருக்கின்ற நார்ச்சத்து இந்த குளுக்கோஸ் சத்துக்களை உடலில் சேர செய்து, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீரான அளவில் இருக்குமாறு செய்து நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை குறைய கருப்பு கவுனி அரிசி
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அவ்வப்போது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகை அரிசியில் நார்ச்சத்து மட்டுமே அதிகம் உள்ளதால் இந்த அரிசியை கொஞ்சம் சாப்பிட்டாலே அதிகளவு உணவு சாப்பிட்ட உணர்வைத் தந்து தேவைக்கு அதிகமாக உண்ணும் பழக்கத்தை தடுத்து நிறுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்புகள் சேர்ந்து உடல் எடை கூடுவதை தடுக்கிறது.
இதய நோய்களுக்கு கருப்பு கவுனி அரிசி பயன்கள்
கருப்பு கவுனி அரிசி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவது இதயம் ஆரோக்கியமாக இயங்குவதற்கு உதவும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கருப்புகவுனி அரிசியில் உள்ள அந்தோசயனின் பைட்டோ கெமிக்கல் வேதிப்பொருட்கள், நமது ரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்ட்ராலின் அளவை வெகுவாகக் குறைக்கிறது. இந்த எல்டிஎல் கொலஸ்ட்ரால் கொழுப்புச்சத்தை பொதுவாக கெட்ட கொழுப்பு என்பார்கள். இந்த வகை கொழுப்புதான் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி, இதய பாதிப்பு மற்றும் இன்ன பிற இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துகிறது என கூறப்படுகின்றது.
புரதச்சத்து நிறைந்த கருப்பு கவுனி அரிசி
மற்ற எல்லா வகை அரிசியைக் காட்டிலும் கருப்பு கவுனி அரிசியில் புரதச் சத்து அதிகம் உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள். கருப்பு கவுனி அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளை வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 அல்லது 4 முறை எடுத்துக்கொள்வதால் அவர்களின் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதைத் தடுத்து உடல் தசைகளின் இறுக்கத் தன்மையை அதிகரித்து உடல் வலிமையை கூட்டுகிறது.
புற்றுநோய்க்கு கவுனி அரிசி
கருப்பு கவுனி அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால் இந்த அரசியல் செய்யப்பட்ட உணவுகளை அவ்வப்போது சாப்பிடுவதால், உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனை படி இந்த கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆஸ்துமா நோய்க்கு கவுனி அரிசி
ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு நுரையீரல்களில் அதிகளவு மியூக்கஸ் எனப்படும் சளி சுரப்பு ஏற்படும் பொழுது அவர்களால் சரிவர சுவாசிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கருப்பு கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதால் இந்த அரிசியில் உள்ள அந்தோசயனின் சத்துக்கள் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிகளவு சளி சுரப்பு ஏற்படாமல் தடுத்து, அவர்களுக்கு சிறிது நோய் நிவாரணம் அளிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பு கவுனியின் பயன்கள்:
1. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கருப்பு கவுனி அரிசி டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர். ஆய்வின் படி, இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கருப்பு கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது…
2. கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.
3. இதில் இனிப்பு பொங்கல் , பாயாசம் , சாதம், கஞ்சி, இட்லி மற்றும் தோசை ஆகியவை செய்து சாப்பிடலாம்.
4. கருப்பு கவுனி அரிசியில் ஈயம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த அரிசியினை அதிக அளவில் உட்கொண்டால், ஆபத்து ஏற்படும். எனவே, இதனை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
5. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதிலும், உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றுகிறது.