இதை தெரிஞ்சிக்கோங்க..! இவர்கள் இறாலை கட்டாயம் தவிர்க்க வேண்டும்..!
இறால் வாங்கும்போது, எப்போதுமே அதன் தலையை சரிபார்க்க வேண்டும் என்கிறார்கள்.. இறால் தலை சுத்தமாகவும், வலுவாகவும், உறுதியாகவும் இருந்தால், அது ஃபிரஷ்ஷான இறால் என தெரிந்து கொள்ளலாம். அதேபோல, இறாலின் ஷெல் போன்ற ஓடு பகுதியும் உறுதியாகவும், கடினமாகவும் இருக்க வேண்டும். மென்மையான ஓடுகள் இருந்தால், அல்லது தளர்வான கால்கள் இருந்தால், அல்லது மெல்லிய அமைப்பை கொண்டிருந்தால், அவை பழைய இறால்கள் என அறிந்துய கொள்ளலாம். அதன் வாசனையே இறாலின் தன்மையை காட்டித்தந்துவிடும்.. மீன் போன்ற வாசனை இருந்தால் அவற்றை தவிர்த்து விடலாம்.
இறால் மீன்களில் கால்சியம் அதிகமாக இருப்பதால், எலும்புகளை உறுதிப்படுத்துகிறது.. எலும்பு சிதைவினையும் தடுத்து நிறுத்துகிறது.. வாரம் ஒருமுறை இறாலை உணவில் சேர்த்து வந்தால், எலும்பு கோளாறுகள் அத்தனையும் நீங்கும். அவை பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.
இறால் ஒரு முக்கிய கடல் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்ணுவார்கள். இவற்றில் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. உலக அளவில் இதற்கென்றே பிரத்தியேக உணவு பிரியர்கள் இருக்கின்றனர். கடல் உணவுகளில் மிகவும் அற்புதமான சுவையையும், உடல் ஆரோக்கியத்தையும் இவை கொண்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கு இறால் மீன்கள் மிகவும் நல்லது.. காரணம், இதில், அயோடின் நிறைந்திருப்பதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க உதவி புரிகின்றன.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காகவும் தேவைப்படுகிறது.
பலருக்கு எதிர்ப்பு சக்தி குறைபாடு அதிகம் ஆகி கொண்டே வருகிறது. அவர்களின் உடல் நலத்தை பாதுகாக்கவே இந்த இறால்கள் பெரிதும் பயன்படுகிறது. இவற்றில் உள்ள அதிகப்படியான ஜின்க் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை கூட்ட இந்த இறால் உதவுகிறது.
பலரின் நீண்ட கால ஆசையாக இருப்பது, கச்சிதமான இடையுடன் கூடிய உடல் அமைப்பு வேண்டும் என்பதே. ஒருவருக்கு அழகான உடல் அமைப்பை இந்த இறால்கள் பெற்று தருகிறது. இறாலில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. எனவே இவை டயட் உள்ளவருக்கு சிறந்த உணவாக இருந்து நலமான உடலை தரும்.
உங்களுக்கு அதிக ரத்த அழுத்தம் பிரச்சினைகள் இருந்தால் சிறந்த மருந்தாக இந்த இறால் இருக்குமாம். இவை, உயர் ரத்த அழுத்த கோளாறுகளை குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டவை. இவற்றில் சோடியம் அதிக அளவில் இருப்பதால் இதய நோய்களுக்கு சிறந்த முறையில் உதவுகிறது.
தலைமுடி வளர்ச்சி பெரிதாக இல்லாதவர்கள் இறால் மீன்களை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.. இறாலிலிருக்கும் கனிமங்கள் முடி வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல, சருமமும் பொலிவு பெறும்.. சரும சுருக்கங்களை போக்குவதில் மிக முக்கியமான பங்கு உண்டு.
இறாலில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை உடலில் சீரான செயல்பாட்டை தந்து ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மூளையின் செயல்திறனை இறால் மேம்படுத்துகிறது.கிட்னியில் ஆரோக்கியத்தை மேம்படுத்த இறால்கள் பெரிதும் உதவுகிறது. ரத்த நாளங்களை சீராக்கி கிட்னியின் ஏற்பட கூடிய கோளாறுகளை இவை தடுக்க கூடியதாம். அத்துடன் ரத்த ஓட்டத்தையும் உடலில் செம்மைப்படுத்துகிறதாம்.
பல கடல்வாழ் உயிரினங்கள் போலவே, இந்த இறால் மீன்களும் மழைக்காலங்களில்தான் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.. இந்த இனப்பெருக்க காலத்தில்தான் இவை அதிகமாக குஞ்சுகளை பொறிக்கின்றன.. அதனால்தான், மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.. இந்த காலக்கட்டத்தில், பிறந்த குஞ்சுகள் வளர்கின்றன.. இந்த குஞ்சுகளை வளரவிட்டால்தான், நமக்கு கடல் உணவுகள் தடையின்றி கிடைக்கும். ஆனால், இனப்பெருக்க காலங்களிலேயே அவற்றை பிடிக்க நேர்ந்தால், அவை கர்ப்ப நிலையிலேயே இருக்கும்.. கடைசியில் அந்த குஞ்சுகளோ அல்லது முட்டைகளோ கருவிலேயே உயிரிழக்க நேரிடும். எனவேதான், பருவமழை காலங்களில் இறால் மட்டுமின்றி மற்ற கடல் உணவுகளையும் உண்பதை தவிர்க்க சொல்கிறார்கள்.
அதேபோல, இறாலில் உள்ள நரம்புகளை நன்றாக சுத்தம் செய்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், குடலில் செரிமானம் பாதிப்பு, அலர்ஜி, மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் இப்படி பல கோளாறுகள் வரலாம். அதேபோல, நச்சு தன்மை கொண்ட இறால்களையும் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இறால் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும்.. அவர்கள் இதனை தவிர்த்துவிடலாம். அதேபோல, இறாலில் குறைவான கொழுப்புகள் இருந்தாலும், அதிகமான கொலஸ்ட்ரோல்கள் இருப்பதையும் மறக்க முடியாது.. அதனால், இதய நோயாளிகள் கட்டாயமாக இறாலை தவிர்க்கலாம்..
என்னதான் இறாலில் கம்மியான கொழுப்புகள் இருந்தாலும், இவற்றில் அதிகமான கொலெஸ்ட்ரோல்கள் இருக்கிறது. எனவே இதய நோயாளிகள் இவற்றை எடுத்து கொள்ள வேண்டாம்.
கடலின் சுத்த தன்மை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது, அதாவது இவற்றின் நச்சு தன்மை அதிகமாகி கொண்டே போகிறது. எனவே, நச்சு தன்மை கொண்ட இறால்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இறால்களின் தோல் விரைவில் செரிமானம் ஆகாது. எனவே இவை வயிற்று கோளாறுகளை ஏற்படுத்த கூடும். ஜெரிமான பிரச்சினை கொண்டவர்கள் இதனை தவிர்ப்பது நன்று.சிலருக்கு இறால் சாப்பிட்டால் உடலில் ஒவ்வாமை ஏற்பட கூடும். அவர்கள் கண்டிப்பாக இதனை சாப்பிடாமல் இருந்து விடலாம்.