வாழ்நாள் முழுவதும் உறங்காத உயிரினம் எதுன்னு தெரியுமா? காரணத்தையும் தெரிஞ்சிக்கோங்க

பொதுவாகவே உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தூக்கம் மிகவும் இன்றியமையாத விடயமாக பார்க்கப்படுகின்றது.

மனிதர்களை பொருத்த வரையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு மற்றும் உடற்பயிற்சி எந்தளவு முக்கியமோ அதே அளவுக்கு சிறந்த தூக்கமும் முக்கியதும் பெருகின்றது.

சரியாத தூக்கம் இல்லாத பட்சத்தில் மனிதர்களால் அடுத்த நாள் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

தொடர்ச்சியாக சரியாக தூக்கவில்லை என்றால் உடல் ரீதியில் பல்வேறு பாதக விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உறங்க வேண்டும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

தூக்கமின்மை பிரச்சினையால் பல்வேறு உடல் உள ரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனிதர்களால் தூக்காமல் வாழ முடியுமா? என்றால் நிச்சயம் சாத்தியமற்றது. ஆனால் ஒரு உயிரினம் தன் வாழ்நாள் முழுவதும் உறங்காது என்றால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றதா?

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் எறும்புகள் தனது வாழ்நாளில் ஒருமுறை கூட உறங்காதாது என்று ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆம் எறும்புகள் வாழ்நாள் முழுவதும் தூங்காதாம்.

என்ன காரணம்?
சுறுசுறுப்க்கு உதாரணமாக எப்போதும் எறும்புகளே குறிப்பிடப்படுகின்றன. ஆனால் ஒரு முறை கூட உறங்காமல் எறும்புகளால் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்ற கேள்வி எழுகின்றது.

அதற்கு என்ன காரணம் என்றால் எறும்புகள் ஒரு நாளைக்கு சுமார் 250 முறை ஓய்வெடுப்பதாக ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் நாள் முழுவதும் அவற்றால் ஆற்றலுடன் இயங்க முடிகின்றது.

அவை லட்சக்கணக்கில் குழுக்களாக வாழ்வதால் எறும்புகள் காலனிகள் என அழைக்கப்படுகின்றன. எறும்புகளின் இனம் பூமிக்கு 2,00000 லட்சம் ஆண்டுகள் பலமை வாய்ந்தது. டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து எறும்புகள் இனம் இன்று வரை நீடித்த வருகின்றது.

எறும்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள பெரோமோன் எனும் ரசாயனம் துணைப்புரிகின்றது.

உணவு தொடர்பதான தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் ஆபத்துக்கள் வரும் போது மற்ற எறும்புகளை எச்சரிப்பதற்கும் குறித்த ரசாயனமே உதவுகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *