‘மின்சார கண்ணா’ பட நடிகையை ஞாபகம் இருக்கா? இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா?
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா திரைப்பட நடிகை மோனிகா காஸ்டலினோவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரதித்து வருகின்றது.
மின்சார கண்ணா
நடிகர் விஜய் திரைப்பயணத்தில் வெளிவந்து ஹிட்டடித்த படங்களில் ஒன்று மின்சார கண்ணா. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். இதில் அவரும் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருப்பார்.
இப்படத்தில் தேவா இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் இன்றளவும் ரசிகர்களின் விருப்ப பட்டடியவில் இருக்கின்றது.
விஜய் குஷ்பு, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், அனு மோகன், சுந்தரராஜன் என பலரும் இணைந்து நடித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மோனிகா காஸ்டலினோ. 90களில் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் போனது.
இந்த படத்தில் இடம்பெற்ற உன்பேர் சொல்ல ஆசை தான் பாடல் இவரை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது.
2009ம் ஆண்டில் இருந்தே ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தார். இடையில் சத்யபிரகாஷ் சிங் என்ற துணை இயக்குனரை திருமணம் செய்தார், ஆனால் ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டனர்.
கோலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் மோனிகா.
இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணைத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.