வெயில் காலத்தில் கட்டியான தயிர் தயாரிக்கனுமா? இதோ டிப்ஸ்
வெயில் காலத்தில் அனைவரும் விரும்பும் கட்டியான தயிர் எவ்வாறு தயாரிப்பது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
வெயிலுக்கு தயிர் சாப்பிடுங்க
வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே பலரும் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் உணவுகளில் ஒன்று தான் தயிர். இது கட்டியான தயிராக இருந்தால் இன்னும் நன்றாகவே இருக்கும்.
தயிரில் இருக்கும் ப்ரோபயாட்டிக்ஸ் குடல் ஆரோக்கியம், ஜீரணத்திற்கு உதவியாக இருக்கின்றது. மேலும் புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி சத்துக்களும் உள்ளது.
உடல் எடையைக் குறைக்கவும் உதவும் தயிர், எலும்புகளை வலுவாகவும் வைத்துள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கட்டியான தயிருக்கு
அனைத்து டயட் வகைகளிலும் தயிரை நாம் எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் இருக்கும் தயிரில் சிறிதளவு எடுத்து வைத்தால் போதும். மறுநாளுக்கு தேவையான தயிரை நாம் பெற்றுக் கொள்ளலாம்.
நாம் எடுத்துக் கொள்ளும் பாலில் அல்ட்ரா பாஸ்டுரைசேஷன் செய்ததை பயன்படுத்தக் கூடாது. சுத்தமான பாலை நன்றாக காய்த்து எடுத்துக் கொள்ளவும்.
நமது தேவைக்கு ஏற்ப பாலை எடுத்துக் கொண்டு, ஏற்கனவே சிறிது எடுத்து வைத்திருக்கும் தயிரையும் அந்த பாலுடன் ஊற்ற வேண்டும்.
இதனை 8 முதல் 10 மணி நேரம் அப்படியே வைத்துவிட்டால் தயிராக மாறிவிடும். பின்பு ப்ரிட்ஜில் எடுத்து வைத்துக்கொண்டு தேவையான நேரத்தில் பரிமாறிக்கொள்ளலாம்.