ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை முறையில் போக்கலாம்..! இதை மட்டும் பண்ணுங்க போதும்

பொதுவாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சிலர் இதற்காக அதிகளவில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர்.

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பெண்களுக்கு முகச்சுருக்கம் மற்றும் முகப்பரு என்பன பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

அதற்கு வீட்டில் உள்ள கொருட்களை கொண்டு எவ்வாறு தீர்வு தேடலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பெண்களின் முகம் வயதாகாமல் இளமையாகவே இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி பேஷியல் மசாஜ் செய்ய வேண்டியது அவசியம்.

மேலும் வெயில் காலங்களில் ஏற்படும் அதிகமான வெப்பம் காரணமாக முகம் பாதிக்கப்படுகின்றது. இதனால் வறண்ட சருமம், பொலிவிழந்த சருமம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

இது போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட தினமும் முகத்திற்கு இந்த தக்காளி பேக் போட வேண்டும். தக்காளி நிச்சயம் வீட்டில் கிடைக்ககூடியதாகவே இருக்கும்.

வீட்டு வைத்தியம்
முதலில் ஒரு பவுலை எடுத்து அதில் கடலை மாவு,எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து மா கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.

முகத்தை நன்றாக கழுவிய பின்னர் இந்த பேக்கை முகத்தில் தடவி சரியாக 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரத்திற்கு மூன்று தடவைகள் செய்து வந்தால் முகச்சுருக்கம் மற்றும் முப்பரு நீங்கி முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *