அம்மாவை மிஞ்சிய அழகில் அஜித் மகள் அனோஷ்கா… வைரல் புகைப்படங்கள்
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்த நடிகர் அஜித்தின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அஜித்- சாலினி தம்பதியினர்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தல அஜித், பிரபல நடிகை ஷாலினியை கடந்த 2000-ஆம் ஆண்டு, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் தான், இந்த அட்டகாசமான ஜோடியில் காதலுக்கு ஆரம்பமாக இருந்தது.
பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இந்த ஜோடி, திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அஜித் – ஷாலினி தம்பதிக்கு கடந்த 2008-ம் ஆண்டு அனோஷ்கா என்கிற மகள் பிறந்தார்.
அனோஷ்காவிற்கு தற்போது 15 வயதாகும் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு தன்னுடைய தந்தை போலவே உயரமாகவும், அம்மாவையே மிஞ்சும் அளவுக்கு அழகாகவும் இருக்கின்றார்.
முன்பெல்லாம் அஜித்தின் குடும்ப புகைப்படங்களை இணையத்தில் காண்பது மிகவும் அரிது, ஆனால் சமீப காலமாக அனோஷ்கா மற்றும் ஆத்விக் ஆகியோரின் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அஜித் தற்போது பைக் டூரில் பிசியாக இருப்பதால் ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக், மகள் அனோஷ்காவுடன் மட்டும் கிரிக்கெட் போட்டியை கண்டு கழித்துள்ளார்.
தனது பிள்ளைகள் மாத்திரமன்றி அண்ணன் ரிச்சர்ட் மற்றும் தங்கை ஷாமிலி ஆகியோரும் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. மேலும் அஜித் மகள் அனோஷ்கா அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலிப்பதாகவும் இருவரும் அக்கா தங்கை போல் இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.