புது வீட்டில் ஏன் பால் காய்ச்சிராங்கணு தெரியுமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
இந்து சமயத்தவர்கள் பல சம்பிரிதாய சடங்குகளை நடத்தி வருகின்றனர். பொதுவாக நாம் புதுமனை கட்டினால் அங்கு பால் காய்ச்சுவது வழக்கம்.
இந்த புது மனை புகுதலில் ஏன் பால் காய்ச்சப்டுகிறது தெரியுமா? எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இந்த புது மனை புகுதலின் போது பால் காய்ச்சுவதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பால் காய்ச்சுதல்
நாம் ஒரு புது வீட்டிற்கு குடியேறப்போகும் போது அது வாடகை வீடாக இருந்தாலும் சரி சொந்த வீடாக இருந்தாலும் சரி பால் காச்சுதல் என்பது சம்பிரிதாயமாக உள்ள ஒரு விஷயமாகும்.
இதன்போது வாஸ்த்து பார்ப்பார்கள் அதற்கேற்ற பூஜை நடத்துவார்கள் இதுபோன்ற பல விஷயங்களை மேற்கொள்வார்கள். இந்த பால் காய்ச்சி வீட்டிற்கு விருந்தினர்களை அழைத்து அதை பங்கிடுவார்கள்.
பாலை காய்ச்சும் போது பால் எப்போதும் பொங்கி வழிய வேண்டும். பொங்கி வழியும் போது கிழக்கு திசை நோக்கி வழிய வேண்டும். இது தான் அந்த வீட்டின் செழிப்பின் அடையாளம் என நம்பப்படுகிறது.
தூய்மையைக் குறிக்கும் அடையாளமாக பால் இருப்பதால் அது புதிய தொடக்கத்தை குறிக்கும். இது வீட்டிற்குள் செல்வம் பெருகுவதைக் குறிக்கிறது.
அதேபோல் பலரும் வீட்டில் பால் நன்றாக நிறம்பி வழிந்தால் தான் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை பொங்கி வழியும் என நம்பப்படுகிறது.
குடும்பத்தில் இருக்கும் எதிர்மறையை அகற்ற உதவுகிறது. இதற்காக தான் புது மனை வீட்டில் பால் காய்ச்சுகிறார்கள்.