நாளை இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..! செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை..!
சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அதாவது, தற்போது மீன ராசியில் நிழல் கிரகமான ராகு உடன் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய நிலையில், அவர்களுக்கு நேர் எதிரே சத்தமா ஸ்தானத்தில் கன்னி ராசியில் கேது உடன் சந்திரனும் சேர உள்ளார். இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது
அந்த வகையில் மார்ச் 25 ஆம் தேதி திங்கட்கிழமை, சந்திர கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. இந்த சந்திர கிரகண நிகழ்வானது காலை 10:23 மணிக்கு தொடங்கி மாலை 4:39 மணிக்கு முடிவடைகிறது.இந்திய நேரப்படி இந்த சந்திர கிரகணமானது பகல் பொழுதில் ஏற்படுவதால், இதனை இந்தியாவில் பார்க்க முடியாது.
இந்த சந்திர கிரகணமானது கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆப்பிரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், வடதுருவம் மற்றும் தென் துருவம், தென் அமெரிக்கா, பசுபிக் பெருங்கடல், உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க முடியும்.
சந்திர கிரகணத்தின் போது என்ன செய்ய கூடாது?
சந்திர கிரகணத்தின் போது உணவு சமைப்பதையும், சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே எந்த வித உணவும் உட்கொள்ளக் கூடாது.
உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். கிரகணத்தின் போது நவகிரக துதியை பாராயணம், சந்திர கிரகணத்துக்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.
கிரகண காலத்தில் தெய்வ சிலை தொடக்கூடாது. கோயிலுக்குள் நுழையக்கூடாது.
செய்து வைத்திருக்கும் உணவுகளில் தர்ப்பை (அருகம்புல்) புல்லினைப் போட்டு வைக்க வேண்டும்.
கிரகண நேரத்தின் போது கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
குறிப்பாக சந்திர கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் வெளியே செல்லக்கூடாது.
சந்திர கிரகண நேரத்தில் செய்ய வேண்டியவை:
சந்திர கிரகணத்தின் போது நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சந்திர கிரகண நேரத்தில், கடவுள் வழிபாடு செய்வதை தவிர்த்தாலும், நாம் தொடர்ச்சியாக மந்திரங்களையும், கடவுள் பெயரை முட்டி இருக்கலாம். புராணங்களைப் படிக்கலாம்.
மந்திரங்கள் தெரியவிட்டாலும் எளிமையான, ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா போன்ற எளிமையான மந்திரங்களை நாம் உச்சரித்துக் கொண்டே இருக்கலாம்.
இந்த சந்திர கிரகணம் முடிந்தவுடன், வெள்ளை நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அசுப பலன்கள் குறையும்.
கிரகணத்தின் போது செய்யும் காரியங்கள் பல மடங்கும் உயரும் என்பதால், நாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நம் உடம்பில் இருக்கும் உணவு பல மடங்கு இருப்பது போல் இருப்பதால், அதை செரிப்பதற்கான செயல்பாடு வயிறுக்கு இருக்காது. அதனால் உடலுக்கு தேவையில்லாத ஆரோக்கிய சீர்கேடு ஏற்படக் கூடும்.