IPL 2024 – சிஎஸ்கேவில் இம்பேக்ட் பிளேயர்ஸ் விதிக்கு யார்? 4 வீரர்களை பயன்படுத்த தோனி திட்டம்
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடர் வரும் மார்ச் மாதம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மினி ஏலம் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்றது.
இதில் சிஎஸ்கே பல முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
அதிகபட்சமாக நியூசிலாந்து வீரர் டேரல் மிச்சலுக்கு 14 கோடி ரூபாய் கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு இம்பாக்ட் பிளேயர் என்ற விதி கொண்டுவரப்பட்டது. அதாவது இன்னிங்ஸில் எந்த பகுதியிலும் பிளேயிங் லெவனில் விளையாடும் ஒரு வீரரை தூக்கி விட்டு அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்தலாம். இது ஐபிஎல் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே யாரை இம்பேக்ட் வீரர்களாக பயன்படுத்தப் போகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சிவம் துபே. சிவம் துபே கடந்த சீசனில் காயம் அடைந்திருந்ததால் அவரை பேட்டிங்கிற்கு மட்டும் சிஎஸ்கே பயன்படுத்தியது. இதே போல ஒரு யுத்தியை சிஎஸ்கே இம்முறையும் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் பந்து வீச்சிலும் சிஎஸ்கே அவரை பயன்படுத்தலாம்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ராஜவர்தன் ஹங்கர்கேகர். இவரை குட்டி ஹர்திக் பாண்டியா என்று அனைவரும் அழைத்து வருகின்றனர். எனினும் சிஎஸ்கே இவருக்கு போதிய வாய்ப்பு கொடுக்கவில்லை. பேட்டிங்கில் அதிரடியாக விளையாடும் ஹங்கர்கேகர் பந்து வீச்சிலும், 140 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படக் கூடியவர்.
இதனால் ஹங்கர்கேகர் இம்பேக்ட் விதியின் கீழ் சிஎஸ்கே இம்முறை பயன்படுத்தலாம். இதேபோன்று இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் நிஷாந்த் சித்து. ஜடேஜா போல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடிய நிசாந்த் சித்து. அண்டர் 19 கிரிக்கெட்டின் மூலம் புகழைப் பெற்றார். இந்த நிலையில் பந்துவீச்சில் இவரை இம்பாக்ட் வீரராக பயன்படுத்தி தோனி விக்கெட்டுகள் எடுக்க பார்க்கலாம்.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்க கூடியவர் முகேஷ் சவுத்ரி அல்லது துசாந்த் தேஷ் பாண்டே ஆவார். சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சை பலப்படுத்துவதற்காக இவரை இம்பேக்ட் வீரர்களாக தோனி நடப்பு சீசனில் பயன்படுத்த கூடும். நான்கு வெளிநாட்டு வீரர்கள் பிளேயிங் லெவனில் இருந்தால் அவர்களை இம்பேக்ட் வீரர்களாக மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.