மக்களே உஷார்..! 12 முதல் 3 மணி வரை வெளியில் தலைக்காட்டாமல் இருப்பது நல்லது..!
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், மார்ச் 29 வரை தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
முதியவர்கள், குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்கள் கையில் தண்ணீர் பாட்டிலும், குடையையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை வெயில் அதிகரிக்கும் நேரமான 12 முதல் 3 மணி வரை வெளியில் தலைக்காட்டாமல் இருப்பது நல்லது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.