அமமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!
பாஜக கூட்டணியில் பாமக 10, அமமுக 2, தமமுக 1, தமாகா 3, ஐஜேகே 1, புதிய நீதிக்கட்சி 1, ஓ.பன்னீர்செல்வம் 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதில் ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. தேனி தொகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திருச்சி தொகுதியில் அமமுகவின் மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தேனியில் திமுக சார்பில் தங்கத் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். திருச்சியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார்.