ஹோண்டாவின் ஸ்டைலோ 160 இந்தியா வருகை.?
ஹோண்டா நவீனத்துவமான ரெட்ரோ டிசைனை கொடுத்து தயாரித்துள்ள ஸ்டைலோ 160 ஸ்கூட்டருக்கான டிசைனுக்கு இந்திய சந்தையில் காப்புரிமை பெற்றுள்ளதால் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
லிட்டருக்கு 45 கிமீ மைலேஜ் தருகின்ற Stylo 160 ஸ்கூட்டரில் 156.9 cc, லிக்யூடு கூல்டு 4 வால்வுகளை பெற்ற eSP+ எஞ்சின் அதிகபட்சமாக 15.4 PS பவர் மற்றும் 13.8 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது.
Honda Stylo 160
மாடர்ன் கிளாசிக் டிசைன் என அறியப்படுகின்ற ஸ்டைலோ 160 ஸ்கூட்டரில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லேம்ப் பெற்றதாகவும் மிக நேர்த்தியான அப்பரானை வளைவுகளுடன் பெற்றதாக அமைந்துள்ளது.
இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் கிளஸ்ட்டர், கீ லெஸ் இக்னிஷன், அகலமான ஃபுளோர் போர்ட் மற்றும் பிரவுன் நிறத்திலான இருக்கைகளை பெற்று பச்சை, சிவப்பு, கருப்பு, பீஜ் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.
மேலும் இந்த மாடல் eSAF (enhanced Smart Architecture Frame) கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மாடலில் 12 அங்குல வீல் பெற்றுள்ளது. முன்புறத்தில் 110/90 மற்றும் 130/80 ட்யூப்லெஸ் டயருடன் உள்ள மாடலில் முன்புறத்தில் 220 மிமீ டிஸ்க் உடன் ஏபிஎஸ் மற்றும் 190 மிமீ டிஸ்க்குடன் சிபிஎஸ் பிரேக் உள்ளது. ஆனால் இந்திய சந்தைக்கு வரும் பொழுது ஏபிஎஸ் மட்டும் பெற்றிருக்கலாம்.
118 கிலோ (ABS) மற்றும் 115 கிலோ (CBS) எடை கொண்டுள்ள ஸ்கூட்டரின் இருக்கை உயரம் 768 மிமீ மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் 151 மிமீ ஆகும்.
இந்திய சந்தையில் தற்பொழுது 150சிசிக்கு மேற்பட்ட ஸ்கூட்டர் சந்தையில் ஏரோக்ஸ் 155சிசி, ஏப்ரிலியா SXR 160 உள்ள நிலையில், அடுத்து ஹீரோ ஜூம் 160 விற்பனைக்கு வரவுள்ளதால் ஹோண்டா நிறுவனமு 150சிசிக்கு மேற்பட்ட ஸ்கூட்டர் சந்தையில் களமிறங்க வாய்ப்புள்ளது
டிசைனுக்கு காப்புரிமை மட்டுமே பெற்றுள்ளதால் ஹோண்டா ஸ்டைலோ 160 மற்றும் ADV 160 என இரண்டையும் கொண்டு வருமா என்பதற்கு தற்பொழுது எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.