உலகின் சக்தி வாய்ந்த பெண் என்பதை நீதா அம்பானி நிரூபிச்சுட்டாங்க! இவங்க காசை காசாவே பாக்க மாட்டாங்க போலிருக்கே!
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மிகப் பெரிய கார் காதலர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவரிடத்தில் 200க்கும் அதிகமான விலை உயர்ந்த மற்றும் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பதும் இந்த உலகம் அறிந்த தகவலே.
இந்த நிலையிலேயே யாரும் அறிந்திராத புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது, முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி இடத்தில் உலகின் மிக மிக விலையுயர்ந்த ஆடி கார் ஒன்று பயன்பாட்டில் இருப்பது பற்றிய தகவலே வெளியாகி, பலர ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது.
ஆடி ஏ9 கெமிலியன் (Audi A9 Chameleon) எனும் அரிய வகை கார் மாடலையே அவர் வைத்திருப்பதாக கூறப்படுகின்றது. எகனாமிக் டைம்ஸ்-ம் இதுகுறித்த ஓர் தகவலை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. இது வழக்கமான கார்களுக்கு அப்பாற்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் விலையும் மிக மிக அதிகமானதாக உள்ளது.
இந்த கார் மாடலின் விலை 100 கோடி ரூபாய்க்கும் அதிகம் ஆகும். இது ஒரே ஒரு யூனிட்டின் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் பலர் இந்த தகவலை கேட்டு ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்திருக்கின்றனர். ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த பிரபல டிசைனர் டேனியல் கர்சி என்பவாரல் வடிவமைக்கப்பட்ட ஓர் கார் மாடலே இதுவாகும்.
ஸ்பீடு மற்றும் நவீன கால அம்சங்களுக்கு பெயர்போன கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இந்த காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 600 எச்பி திறனை வெளியேற்றும். இரண்டு கதவுகளை மட்டுமே இந்த கார் மாடல் கொண்டிருக்கும்.
மேலும், இது ஓர் 5 மீட்டர் நீளம் கொண்ட கூபே வகை கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் பாடி பேனல்கள் எலெக்ட்ரானிக் பெயிண்டிங் (Electronic Painting) சிஸ்டத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இந்த அம்சம் தேவைக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஒரே ஒரு பட்டனை தட்டுவதன் வாயிலாக விருப்பமான நிறத்தை நொடியில் மாற்றிக் கொள்ள முடியும். அத்துடன், இந்த காரின் விண்ட்ஷீல்டு மற்றும் ரூஃப் இரண்டும் இணைந்து ஒரே துண்டாக இருக்கும். இந்த மெட்டீரியல் தானாகவே ரிப்பேர் செய்துக் கொள்ளும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபோன்று இன்னும் பல நம்ப முடியாத சிறப்புகளைத் தாங்கியதே ஆடி ஏ9 கெமிலியன் கார் ஆகும். இதனால்தான் இந்த காரின் விலையும் மிக மிக அதிகமானதாக இருக்கின்றது. இத்தகைய காரையே உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக கருதப்படும் நீதா அம்பானி வைத்திருக்கின்றார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆகியவற்றின் தலைவரும் நிறுவனருமாக நீதா அம்பானி இருக்கின்றார். இவரின் சொத்து மதிப்பு 116.1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் என கூறப்படுகின்றது. இதனால்தான் உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகவும் நீதா அம்பானி திகழ்கின்றார்.
இவரிடத்தில் ஆடி ஏ9 கெமிலியன் மட்டுமின்றி இன்னும் பல விலையுயர்ந்த பொக்கிஷங்களும் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில், 240 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரைவேட் சொகுசு விமானம் ஒன்றும் பயன்பாட்டில் இருக்கின்றது. 2007 ஆம் ஆண்டில் முகேஷ் அம்பானி இந்த விமானத்தை நீதா அம்பானிக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.