சமந்தாவின் புதிய வெப்சீரிஸ்… எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
தி பேமிலி மேன் இணையத் தொடரின் இரண்டாவது சீஸனில், ஈழப்போராளியாக சமந்தா அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அடுத்து அவர் நடிக்கும் புதிய இணையத் தொடரின் பெயர் மற்றும் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர்.
ஹாலிவுட்டில் தயாரான சிட்டாடல் இணையத் தொடர் 2023, ஏப்ரல் 28 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. ரிச்சர்ட் மேடன், ப்ரியங்கா சோப்ரா இதில் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.
சிட்டாடல் என்ற உளவு நிறுவனத்தை மையப்படுத்தி இந்த ஸ்பை த்ரில்லர் எடுக்கப்பட்டிருந்தது. ஆறு எபிசோடுகள் கொண்ட முதல் சீஸனுக்கு சுமார் 300 மில்லியன் யுஎஸ் டாலர்கள் செலவளிக்கப்பட்டது. இதுவரை எடுக்கப்பட்ட மெகா பட்ஜெட் இணையத் தொடர்களில் இதுவும் ஒன்று. சிட்டாடல் கதையை வெவ்வேறு நாடுகளின் பின்னணியில் எடுத்து வருகின்றனர்.
இத்தாலி பின்னணியில், சிட்டாடல் டயானா என்ற பெயரில் இணையத் தொடர் தயாராகி வருகிறது. இந்தியாவில், இதனை தி பேமிலி மேன், பார்ஸி, கன்ஸ் அண்ட் குலாப்ஸ் இணையத் தொடர்களை இயக்கிய ராஜ் & டிகே எடுக்க உள்ளனர். இதற்கு சிட்டாடல் – ஹனி பன்னி என பெயர் வைத்துள்ளனர். சமந்தா, வருண் தவான் இதில் முக்கிய வேடங்களில் நடிக்க கேகே மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
சிட்டாடல் ஆக்ஷன் அட்வென்ஜர் நிரம்பிய ஸ்பை த்ரில்லர். இதனை இந்தியாவுக்கு ஏற்ப எடுக்கயிருக்கின்றனர். இதுநாள்வரை இந்தியாவில் தயாரான இணையத் தொடர்களில் அதிகப் பொருட்செலவில் எடுக்கப்படும் தொடராக சிட்டாடல் ஹனி பன்னி இருக்கும் என்கிறார்கள். இது அமேசான் ஓடிடி தளத்துக்காக எடுக்கப்படும் இணையத் தொடராகும்.