ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் எப்படியிருக்கும்..? வெளியான புது அப்டேட்!
ஸ்பைடர், சர்கார், தர்பார் என ஏ.ஆர்.முருகதாஸின் கடைசி மூன்று படங்கள் ரமணா, துப்பாக்கி படங்களில் அவர் சம்பாதித்த பெயரை தக்கவைக்கும்படி அமையவில்லை. ஒரு மாபெரும் வெற்றி அவசியம் என்ற நிலையில், நான்கு வருட இடைவெளி எடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை ராமாவரத்தில் உள்ள ஜிம்மில் இதன் படப்பிடிப்பை முருகதாஸ் நடத்தினார். இந்தப் படம் தொடங்கும் மன்பே சஜித் நடியட்வாலா தயாரிப்பில், சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி, என்ன மாதிரியான படத்தை எடுப்பது என்பதை முடிவு செய்திருந்தனர். அதனை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தனர். சில தினங்கள் முன்பு அளித்த பேட்டியொன்றில், சல்மான் கான் படம் குறித்து முருகதாஸ் பேசியிருந்தார். சர்வதேச அளவில் சென்று சேரக்கூடிய கமர்ஷியல் ஆக்ஷன் என்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்றவர், சமூகக் கருத்தும், சென்டிமெண்டும் கதையில் கலந்திருக்கும் என்றார்.
சல்மான் கானின் நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்துகிறவிதமாக அவரது கதாபாத்திரம் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியில் தயாரானாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் படத்தை ‘டப்’ செய்து பான் – இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர்.
சிவகார்த்திகேயன் படத்தை விரைவில் முடித்து, இந்த வருட இறுதியில் சல்மான் கான் படத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.