நாய் கூட மதிக்க மாட்டுக்குது சார்.. ஹர்திக் வாழ்க்கையில் உண்மையாவே நடந்துருச்சி! மைதானத்தில் சம்பவம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் களமிறங்கியது. இதில் கேப்டனாக களம் இறங்கிய ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் சொந்த ஊர் குஜராத் தான். இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்த நிலையில் திடீரென்று அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக மாறிவிட்டார்.
இதனால் சொந்த அணிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறி ஹர்திக் பாண்டியாவை அகமதாபாத் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் நமது வாழ்க்கையில் பலர் இந்த வசனத்தை எப்போதாவது பயன்படுத்திருப்போம். ஒரு நாய் கூட நம்மல மதிக்க மாட்டேங்குது சார் என்று பலரிடம் நிச்சயம் புலம்பி இருப்போம். அது ஹர்திக் பாண்டியா வாழ்க்கையில் இன்று நடந்து விட்டது.
ஹர்திக் பாண்டியா இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக இருந்தார். அவருடைய சில அறிவுரைகளை பும்ரா உள்ளிட்டோ மதிக்காமல் இருந்தனர். இதனால் அவர் ஏற்கனவே கடுப்பில் இருந்தார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஆட்டத்தின் 15 வது ஓவர் வீசி கொண்டு இருந்தார். அப்போது மைதானத்திற்குள் திடீரென்று ஒரு நாய் உள்ளே புகுந்தது.
அந்த நாய் விரட்டும் பணியில் பலரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ஹர்திக் பாண்டியா அந்த நாயை சூச்சூ என்று அழைத்து கொஞ்ச பார்த்தார். ஆனால் அந்த நாய், ஹர்திக் பாண்டியாவை மதிக்காமல் அப்படியே ஓடி சென்று விட்டது. இதனால் அவர் ஏமாற்றம் அடைந்து தன்னுடைய இடுப்பில் கை வைத்துக் கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியாவை ஒரு நாய் கூட மதிக்க மாட்டிங்குதே என்று அவரை கமெண்ட் செய்து வந்தனர். மேலும் சிலர் மைதானத்தில் எத்தனை நாய்கள் இருக்கிறது என்று பாருங்கள் என அத்துமீறி கமென்ட் செய்து வருகிறார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி அழைத்து தான் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாறியதாகவும், இதனால் அவரை இந்த அளவுக்கு கிண்டல் செய்வது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.