மீசையில் மண் ஒட்டலையே.. இதுல்லாம் பிரச்சினையே இல்ல.. இன்னும் 13 போட்டி இருக்கு.. ஹர்கித் பேச்சு
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக முதல் முறையாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தோல்வியை ருசித்து இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு சீசனில் ஐந்தாவது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கடைசி கட்டத்தில் சொதப்பி ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறது. இதன் மூலம் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கடைசி ஐந்து ஓவர்களில் 42 ரன்கள் தான் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதனை நிச்சயம் நாங்கள் எட்டுவோம் என்று நினைத்தோம். ஆனால் இன்று (துரதிர்ஷ்டவசமாக) எங்களால் இந்த இலக்கை எட்ட முடியவில்லை. இறுதிக்கட்டத்தில் நாங்கள் சில விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து விட்டதால் கொஞ்சம் தடுமாறினோம். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அதுவும் இது போன்ற ஒரு மிகப்பெரிய மைதானத்தில் விளையாடும்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நொடியையும் அனுபவிக்க வேண்டும். மேலும் ரசிகர்களும் இன்றைய ஆட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இன்றைய ஆட்டம் பிடித்திருக்கும் என்று நினைக்கின்றேன். திலக் வர்மாவும்,டிம் டேவிட் பேட்டிங் செய்யும்போது திலக் வர்மா? ஒரு ரன் ஓடாமல் மறுத்துவிட்டார்.
இதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஹர்திக் பாண்டியா, நிச்சயமாக இல்லை. அதை நான் தவறாக நினைக்கவில்லை. திலக் வர்மா அந்த தருணத்தில் இது நல்ல ஐடியா என்று நினைத்திருக்கலாம். அவர் எடுக்கும் முடிவுக்கு நான் நிச்சயம் அவரை ஆதரிப்பேன். இது எல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. இன்னும் 13 போட்டிகள் இருக்கிறது. அதில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.