ஏப்ரல் 1 முதல் எல்லாம் மாறப் போகுது!
வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய பென்சன் திட்டத்தில் ஒரு முக்கியமான விதி மாற்றப்படுகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய பென்சன் திட்ட பயனர்களுக்களுக்கான புதிய விதிமுறையை தற்போது அறிவித்துள்ளது. இதன்படி, இனி ஓய்வூதிய கணக்கில் உள்நுழைவதற்கான செயல்முறையானது மாற்றப்பட்டுள்ளது. அதாவது இதுவரை பின்பற்றப்பட்டு வந்த பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அடிப்படையிலான உள்நுழைவு செயல்முறையானது ஆதார் அடிப்படையிலான உள்நுழைவு அங்கீகார முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தேசிய பென்சன் திட்டத்தின் சென்ட்ரல் ரெக்கார்ட் கீப்பிங் ஏஜென்சி (CRA) அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய விதிமுறைப்படி ஓய்வூதிய கணக்கில் உள்நுழைவதற்கான செயல்முறையானது இரண்டு கட்ட ஓடிபி சரிபார்ப்பு முறைக்கு உட்படுத்தப்படும்.இந்த புதிய பாதுகாப்பு நெறிமுறை செயல்படுத்தப்பட்டதும், தேசிய பென்சன் திட்ட சந்தாதாரர்கள் இனி ஆதாருடன் அங்கீகரிக்க வேண்டும்.
பயனாளிகளின் கணக்கில் உள்நுழைய பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP நம்பரை உள்ளிட வேண்டும். இதற்காக, PFRDA தற்போது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் அடிப்படையிலான உள்நுழைவை ஒருங்கிணைக்கும். பென்சன் வாங்குவோரின் பாதுகாப்பு மற்றும் மோசடிகளைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தேசிய பென்சன் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு CRA அமைப்பில் உள்நுழைய தேசிய பென்சன் திட்ட ஐடி மற்றும் கடவுச்சொல் தேவை. ஆனால் இதற்குப் பிறகு அவர்கள் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பைச் செய்ய வேண்டும்.
முதலில் https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html இணையதளத்தைப் பார்வையிட வேண்டும்.
அதன் பிறகு ‘Login with PRAIN/IPIN’ ஆப்சனை கிளிக் செய்யவும். புதிய பக்கம் திறந்த பிறகு PRAIN/IPIN என்ற ஆப்சனைகிளிக் செய்யவும். உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். கேப்ட்சா சரிபார்ப்பை முடித்த பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிடவும். இப்போது நீங்கள் உங்கள் NPS கணக்கைத் திறக்கலாம்.