உஷாரா இருங்க..! அதிகரித்து கொண்டே வரும் ஆதார் மோசடிகள்..!
இந்தியாவில் ஆன்லைன் வழியான டிஜிட்டல் மோசடிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதில் பெரும்பாலான மோசடிகள் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு நடத்தப்படுகிறது. இந்த மோசடி செயல்களில் இருந்து தப்பித்து கொள்ள பயனர்கள் பின்வரும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்.
பயனர்கள் செய்ய கூடியவை:
ஆதார் பயோமெட்ரிக் ஆதன்டிகேஷனை லாக் செய்ய வேண்டும்.
பரிச்சயம் இல்லாத கம்ப்யூட்டர்களில் சேகரிக்கப்பட்ட உங்களின் ஆதார் கார்டு நகல்களை அழித்து விட வேண்டும்.
ஆதார் டிஜிட்டல் நகல்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும்.
தற்போதைய மொபைல் நம்பர் ஆதார் உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.
UIDAI வெப்சைட்டை அவ்வப்போது பார்வையிட்டு உங்கள் ஆதார் நம்பரின் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்.
பயனர்கள் செய்ய கூடாதவை:
டெலிவரி அல்லது பிற வெரிஃபிகேஷன் காரணங்களுக்காக உங்களுடைய ஆதார் நம்பரை கொடுக்க கூடாது.
ஆதார் கார்டை சமர்ப்பிப்பது அவசியமெனில் மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்தவும்.
அரசு ஏஜென்சிகள் அல்லது வங்கிகளில் இருந்து பேசுவதாக சொல்லி OTP களை கேட்கக்கூடிய நபர்களிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சோஷியல் மீடியா அல்லது பரிட்சயம் இல்லாத நபர்களுக்கு உங்களுடைய ஆதாரை பகிர்ந்து கொள்ள கூடாது.
உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கம்ப்யூட்டரில் அல்லது பிற டிஜிட்டல் சாதனைகளில் UIDAI வெப்சைட்டை லாகின் செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.