முழு கதையை கேட்காமல் நோ சொன்ன விஜய்.. சூப் ஹிட் கொடுத்த இயக்குனர்.. சண்டக்கோழி படத்தில் நடந்தது என்ன?
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம்வந்து கொண்டிருப்பவர். எப்படியாவது நடிகர் விஜயை வைத்து படம் எடுத்துவிட வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவாக உள்ளது. விஜய் ஒரு படத்தை உறுதி செய்வதற்கு முன்பாக பல இயக்குனர்களிடம் கதையை கேட்டு அதில் அவருக்கு பிடித்த கதை தேர்வு செய்வார். இவ்வாறு ஒரு பிரபல இயக்குனர் சொன்ன கதையை பாதியிலேயே நிறுத்த சொல்லி நிராகரித்த படம் ஒன்று சூப் டூப்பர் ஹிட் கொடுத்தது.
யதார்த்தமான கதைக்களம் , என தனது தனித்துவமான படைப்புகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் லிங்குசாமி. ஒரு முறை நடிகர் விஜயை நேரில் சந்தித்து தனது பட கதையை கூறியுள்ளார். கதை முழுவதுமாக கூறி முடிக்கும் முன்னரே பாதியிலேயே வேண்டாம் என கூறி நிறுத்த சொன்னாராம் விஜய் . இன்னும் ஒரு 10 நிமிஷம் கேளுங்க உங்களுக்கு கதை புரியும் என்று லிங்குசாமி கூறியும் விஜய் வேண்டாம் என உறுதியாக கூறி அவரை அனுப்பி வைத்தாராம்.
அந்த படம் தான் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘சண்டக்கோழி’. விஜய் நிராகரித்த பின், நடிகர் விஷாலை அணுகிய லிங்குசாமி அந்த படத்தை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.
அதன் பின் விழா ஒன்றில் பங்கேற்ற லிங்குசாமியை சந்தித்த விஜய் அவரிடம் ‘அண்ணா படம் சூப்பராக இருந்தது’ என கூறியுள்ளார். அதற்க்கு லிங்குசாமி, ‘நீங்க தான் பாதிக்கு மேல கேக்கவே இல்லையே’ என என கோபமாக கேட்டிருக்கிறார்.