மாலை நேர ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்… ஓட்ஸ் மசாலா வடை செய்வது எப்படி?
மாலை வேலையில் அனைவரும் விரும்பி சாப்பிட நினைக்கு ஸ்நாக்ஸாக ஓட்ஸ் மசாலா வடை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக மாலை நேரம் ஆகிவிட்டாலே எதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும்.
இத்தருணத்தில் ஆரோக்கியமான வகையில் இருந்தால் தான் எந்தவொரு கெடுதல் இல்லாமல் இருக்கும்.
தற்போது ஓட்ஸில் மசாலா வடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1கப்
ஓட்ஸ் – 1/4 கப்
வெங்காயம் – 3 டீஸ்பூன்(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3
(நறுக்கியது)
பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
கொத்தமல்லி இலைகள்
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்பு இதில் ஓட்ஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி உப்பு, பெருஞ்சீரகம், கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து கடாய் ஒன்றில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறு சிறு வடை போன்று தட்டி போடவும்.
நன்கு பொன்னிறமாக வந்ததும், வடையை எண்ணெய்யிலிருந்து எடுத்து, பிடித்தமான சட்னி வைத்து சாப்பிடவும். அவ்வளவு சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் மசாலா வடை ரெடி….