இந்த ஆண்டின் சூரிய கிரகணத்தை 54 வருடங்களுக்கு முன் துல்லியமாக கணித்த நாளிதழ் பத்திரிக்கை…நடக்கவிருப்பது என்ன?
இந்த ஆண்டு ஏப்ரல் 8 ம் திகதி உண்டாகப்போகும் சூரியகிரகணம் பற்றி அமெரிக்காவில் ஓஹியோவில் சுமார் 54 வருடங்களுக்கு முன்னர் கணிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூரிய கிரகணம்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, சூரிய ஒளி பூமியை அடையாது. இந்த நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 2024 அன்று நிகழும். இது இது 9:12 மணிக்கு தொடங்கி 1:25 மணி வரை நீடிக்கும். இது ஜோதிட மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதன் தாக்கம் 12 ராசிகளில் மட்டுமல்லாமல், நாடு, உலகம் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவை தாக்காது.
இந்த சூரிய கிரகணத்தை 54 ஆண்டுகள் முன்பே 1970 ஆம் ஆண்டிலேயே நாளிதழில் கணிக்கப்பட்டதை காண முடிகின்றது. தற்போது இந்த நாளிதழின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/Rainmaker1973/status/1770031100875694087