மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாக இருக்கும், அதிர்ஷ்டம் பெருகும்: உங்க ராசியும் இதுவா?

ஜோதிட சாஸ்திரத்தில், கிரக மாற்றங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளன. கிரகங்கள் ஒரு குறிப்பிட்டு காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பெயர்ச்சிகளால் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் அதிகப்படியான தாக்கங்களும் மாற்றங்களும் ஏற்படுகின்றன.

சுகம், மகிழ்ச்சி, பேச்சாற்றல், அறிவாற்றல், அழகு, பண்பு, பெருமை ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர் சுக்கிரன். இவர் மார்ச் 31ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வரை சுக்கிரன் மீன ராசியில் இருப்பார்.

சுக்கிரனின் ராசி மற்றும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். பணியிடத்திலும் தொழிலிலும் அபிவிருத்தி ஏற்படும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் அதிகப்படியான லாபத்தை காண்பார்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

ரிஷபம் (Taurus)

சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் உங்களது நீண்ட நாள் ஆசை நிறைவேற வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான லாபம் உண்டாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

மிதுனம் (Gemini)

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மகிழ்ச்சியையும் செழிப்பையும் அள்ளித்தரும். பணி இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திறமையை நிரூபிக்க பலவித வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்கள் ஆளுமை முன்னேறும். பண வரவு அதிகமாகும். பணி இடத்தில் மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம் (Cancer)

மார்ச் 31 க்கு பிறகு வாகனம் வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் அதிகமாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

கன்னி (Virgo)

மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உங்கள் வியாபாரத்தை முன்னேற்றுவதற்கான பல வித வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள்.

கும்பம்
சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குடும்பத்திலும் தொழிலிலும் பல வித நல்ல செய்திகளை பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். முன்னேற்றம் இந்த காலத்தில் விரைவாக நடக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்

மீனம் (Pisces)

மீனத்தில் தான் சுக்கிரன் பயிற்சி நடக்க உள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் அதிகமாகும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *