நோட் பண்ணுங்க! இந்த நோயாளிகள் மறந்து கூட மாதுளையை சாப்பிடக்கூடாது
சிவப்பான ஜூசி விதைகளுடன் கூடிய மாதுளை அனைவருக்கும் பிடிக்கும். இது சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இதனை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள இரத்தக் குறைபாட்டை நீக்கலாம். அதேபோல் மாதுளையில் வைட்டமின்-பி,சி,கே, நார்ச்சத்து, இரும்பு சத்து, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஒமேகா-6 என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனினும் சிலருக்கு மாதுளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அத்தகைய நபர்களுக்கு உடலில் பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே எந்தெந்த நபர்கள் மாதுளை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது உடலில் இரத்தத்தை அதிகரிக்கிறது, இதனால் உடலில் தடிப்புகளை ஏற்படுத்தும்.
மனநலப் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், அதற்கான மருந்துகளையும் உட்கொள்பவர்கள் மாதுளை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல் அல்லது வாயு பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாதுளை ஜீரணிக்க கடினமாக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், இது மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை அதிகரிக்கலாம்.
இருமல் பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் மாதுளை குளிர்ச்சியானது, இதன் காரணமாக சளி மற்றும் இருமல் பிரச்சனையை இது மேலும் அதிகரிக்கும். தொற்று அபாயத்தையும் அதிகரிக்கலாம்.
குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மாதுளைக்கு குளிர்ச்சியான தன்மை உள்ளது, எனவே இது உடலில் இரத்த ஓட்டத்தை மெதுவாக்கலாம், இதனால் இரத்த அழுத்தம் குறையும்.